Baakiyalakshmi July 29: அவமானப்பட்ட பாக்கியா எடுத்த அதிரடி முடிவு... கண்கலங்கிய ராமமூர்த்தி... பாக்கியலட்சுமியில் இன்று!
*ஈஸ்வரியை நினைத்து பதறும் ராமமூர்த்தி*பேங்க் லோகானுக்கு பாக்கியா எலிஜிபிள் இல்லை என நிராகரிக்கப்படுகிறாள்* டிகிரி படிக்கச் ஆசைப்படும் பாக்கியாவை கிண்டல் செய்யும் இனியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா சமயலறையில் ஏதோ வேலை செய்து கொண்டு இருக்க அங்கே செழியன் வந்த தயங்கி தயங்கி பேசுகிறான். "இது செய்யவா, அது செய்யவா" எனக் கேட்கிறான். அதன் பின் செழியன் தான் இப்படி செய்கிறான் எனப் புரிந்து கொண்டு “உனக்கு ஏதாவது வேணுமா” என கேட்கிறாள்.
“ஜெனிக்கு வளைகாப்பு முடிந்ததும் அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்கலாம்” என்கிறான் செழியன். “அவங்க பொண்ண கூட்டிட்டு போறாங்க நான் என்ன செய்ய முடியும்?” என்கிறாள் பாக்கியா. “அவங்க கிட்ட சொல்லி ஜெனிய கூட்டிட்டு போக வேண்டாம் என சொல்ல வேண்டும்” என பாக்கியாவிடம் ரெக்வஸ்ட் செய்கிறான் செழியன். பாக்கியாவும் “சரி பார்க்கலாம்” என சொல்கிறாள்.
அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது ராமமூர்த்தி, ஈஸ்வரியின் நினைவாக தூக்கத்தில் எழுந்து பதற்றத்துடன் கதறுகிறார். அதைக் கேட்ட பாக்கியாவும், செழியனும் உள்ளே சென்று அவரை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார்கள்.
அடுத்த நாள் காலை கேன்டீனுக்கு வந்த பாக்கியா செல்வியிடம், “ராஜசேகர் சார் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் பேங்க் லோன் தருகிறார்கள்" என சொன்னார். "நாம போய் விசாரிச்சுட்டு வரலாம்" என செல்வியை அழைத்து செல்கிறாள். அங்கு பேங்க் மேனேஜர் எல்லா டாகுமெண்ட்களையும் செக் செய்து விட்டு டிகிரி சர்டிபிகேட் இல்லயே எனக் கேட்கிறார். “பாக்கியா நான் +2 வரை தான் படித்துள்ளேன்” என சொல்கிறாள். “சாரி மேடம் டிகிரி படிச்சவங்களுக்கு தான் கம்மியான வட்டியில் லோன் தருகிறோம். அதனால் நீங்க எலிஜிபிள் கிடையாது” என்கிறார்.
வீட்டில் ஜெனி, அமிர்தா மற்றும் ராமமூர்த்தி மூவருடன் பாக்கியா பேசி கொண்டு இருக்கிறாள். அப்போது “லோன் விஷயம் என்ன ஆனது?” என ஜெனி கேட்கிறாள். நடந்ததை பற்றி பாக்யா சொல்லவும் அப்போ ராமமூர்த்தி “ஜெனி, அமிர்தா இரண்டு பெரும் டிகிரி முடிச்சு இருக்காங்க இல்ல அவங்க பேர்ல லோன் எடுக்கலாம்” என ஐடியா கொடுக்கிறார்.
நைட் இனியாவும் பாக்கியாவும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இனியாவை எழுப்பி பாக்கியா “நானும் காலேஜ் போனா எப்படி இருக்கும்?” என்று சொல்ல, இனியா “லூசு மாதிரி பேசாத அம்மா. நீயும் நானும் ஒண்ணா காலேஜ் போன எல்லாரும் சிரிப்பாங்க. அது அது அந்த வயசுல தான் செய்யணும்” என சொல்லிவிட்டு படுத்துக்கொள்கிறாள்.
அடுத்த நாள் காலை ராமமூர்த்தி ஈஸ்வரியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். அப்போ செழியனும் ஜெனியும் “தாத்தாவை இப்போ சந்தோஷப்படுத்த என்ன செய்யலாம்” என யோசிக்க, உடனே ஈஸ்வரிக்கு வீடியோ கால் செய்து பேச வைக்கிறார்கள். ஈஸ்வரியை பார்த்ததும் கண்கலங்குகிறார் ராமமூர்த்தி. இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதை பற்றி பேசிக்கொள்கிறார்கள். போனை வைத்த பிறகு செழியன், தாத்தாவை கலாய்க்கிறான். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.