Baakiyalakshmi August 23 episode : இனியாவால் கோபிக்கு வந்த புதிய சிக்கல்... போட்டுக்கொடுத்த ராதிகாவின் அம்மா... பாக்கியலட்சுமியில் இன்னைக்கு என்ன?
Baaakiyalakshmi August 23 episode :*பாக்கியாவை கேலி செய்யும் கோபி *இனியாவை கேரளா கூட்டிச்செல்ல பிளான் போடும் கோபி *ராதிகாவை ஏற்றிவிட்ட அவளின் அம்மா இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் இனியா கோபியுடன் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறாள். பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நிறுத்தப்போவதை நினைத்து வருத்தமாக இருப்பதாக இனியா கோபியிடம் சொல்கிறாள். சீக்கிரமே பாக்கியா காலேஜை விட்டும் நின்றுவிடுவாள் என சொல்கிறார் கோபி.
அடுத்த நாள் காலை பாக்கியாவும் எழிலும் பேசிகொண்டு இருக்கிறார்கள். "நிலாவுக்கு இப்போது காய்ச்சல் கொஞ்சம் பரவாயில்லை. நான் தான் கொஞ்சம் பயந்துட்டேன்" என்கிறான் எழில். "குழந்தைகளுக்கு இப்படித்தான் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். அதுக்கெல்லாம் வருத்தப்படலாமா" என்கிறாள் பாக்கியா.
ஈஸ்வரி செல்விக்கு யோகா சொல்லி கொடுக்கிறேன் என சொல்லி பாடாய்ப்படுத்துகிறார். செல்வி ஜாடையாக பாக்கியாவிடமும், எழிலிடமும் காப்பாத்த சொல்லி கேட்கிறாள். விடாப்பிடியாக செல்விக்கு சொல்லிக்கொடுக்கிறார் ஈஸ்வரி. அதைப்பார்த்து பாக்கியாவும் எழிலும் சிரிக்கிறார்கள்.
இனியாவும் பாக்கியாவும் காலேஜில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது இனியா காலேஜ் ஆசைன்மென்ட்டுக்காக கேரளா செல்ல வேண்டும் என சொல்கிறாள். "நீ எப்படி போவ" என பாக்கியா கேட்கிறாள். நான் டாடிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டேன். அவர் என்னை கூட்டிட்டு போவார் என இனியா சொன்னதும் பாக்கியா "என்கிட்டே எல்லாம் பர்மிஷன் கேட்க மாட்டியா?" என்கிறாள். இனியா பர்மிஷன் கேட்க பாக்கியா "சந்தோஷமா போயிட்டு வா" என்கிறாள். கோபி அங்கே வந்ததும் இனியா கேரளா போவதை பற்றி சொல்கிறாள். கோபியும் நிச்சயமாக கூட்டிட்டு போறேன் என சொன்னதும் இனியா சந்தோஷப்படுகிறாள்.
வீட்டில் கோபி, ராதிகா, மயூ எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது கோபிக்கு இனியா ஃபோன் செய்யவும் கோபி பேசுவதற்காக செல்கிறார். அதை பார்த்து ராதிகாவின் அம்மா ராதிகாவை ஏத்தி விடுகிறார். கோபி வந்ததும் இனியாவுடன் கேரளா போவதை பற்றி சொன்னதும், ராதிகா நீங்க என்கிட்டே கேட்கவே இல்லையே என்கிறாள். ராதிகாவின் அம்மாவும் நீங்க அந்த குடும்பத்து மேல காட்டுற அக்கறை கொஞ்சமாவது ராதிகா மேலையும், மயூ மேலையும் காட்டலாம் இல்ல. எப்ப பார்த்தாலும் உங்க பொண்ணு பின்னாடியே ஓடுறீங்க என்றதும் கோபிக்கு கோபம் வந்து விடுகிறது.
மயூ எனக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோலத்தான் இனியாவும். நான் பாக்கியாவைத்தான் டைவர்ஸ் பண்ணேன். என்னோட குடும்பத்தை இல்லை. நாளைக்கு செழியனுக்கு குழந்தை பிறந்தாலும் நான் பார்க்கப்போவேன், என சொல்லிவிட்டு சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார்.
இனியாவுக்கு ஃபோன் செய்து வெளியே வரச்சொல்லி பேசுகிறார் கோபி. அவர்கள் பேசுவதை பார்த்த ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் வந்து போட்டு கொடுக்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் ராதிகா கோபியிடம் "அம்மா அப்படி பேசினது தப்புதான். நானும் மயூவும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். அதனால் தான் அம்மா உங்ககிட்டா அப்படி பேசிட்டாங்க. நானும் நீங்களும் கடைசியா எங்க போனோம் சொல்லுங்க" என்கிறாள். "நான் இங்க உங்களோட தானே இருக்கிறேன். நாம தான் பாண்டிச்சேரி போயிட்டு வந்தோமே" என்றதும், ராதிகா "அத பத்தி பேசியே ஆகணுமா? நீங்க உங்க பசங்களோட செலவு செய்யற நேரத்துல பாதி கூட எங்களுக்காக செலவு பண்ணல. நாம முக்கால்வாசி நேரம் எதை பத்தி பேசுறோம்?" என ராதிகா கேட்டதும் அதிர்ச்சியில் பார்க்கிறார் கோபி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.