Anna Serial: பாண்டியம்மா கழுத்தில் அரிவாள்: மரண பயத்தைக் காட்டிய இசக்கி.. அண்ணா சீரியல் அப்டேட்!
பரணி பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது காதலோடு அவனை நெருங்கி நெருங்கிச் செல்ல, ஷண்முகம் கடுப்பாகிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகமும் பரணியும் கிளினிக்கிற்கு கிளம்ப, முத்துப்பாண்டி துப்பாக்கியை காணவில்லை என சண்முகத்தை பார்க்க வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பரணி பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது காதலோடு அவனை நெருங்கி நெருங்கிச் செல்ல, ஷண்முகம் கடுப்பாகிறான். “ஒழுங்கா உட்கார்ந்து வராதா இருந்தா வா இல்லனா நான் வரல" என்று வண்டியை நிறுத்தி விட, பரணி "சரி ஒழுங்கா வரேன்" என்று சொல்ல, இருவரும் கிளம்ப எதிரே முத்துப்பாண்டி மோதுவது போல் வந்து நிற்கிறான்.
ஷண்முகத்திற்கும் அவனுக்கும் இடையே சண்டை உருவாக, முத்துப்பாண்டி "நீ தான் ஆளை வச்சி அடிச்சி என் துப்பாக்கியை திருடுன" என்று கேட்க, பரணி "அவன் அடிக்கணும்னு நினைச்சா ஆள் எல்லாம் தேவையே இல்ல, அவனே அடிச்சி தூக்கி போட்டு போயிட்டே இருப்பான்" என்று சொல்கிறாள். பின்னாடியே வந்த சௌந்தரபாண்டி பிரச்னை வேண்டாம் என்று சொல்லி முத்துபாண்டியை அழைத்து செல்கிறார்.
இங்கே வீட்டில் சாப்பாடு சரியில்லை என்று இசக்கியை கூப்பிட்டு பாண்டியம்மா "ஓடுகாளிக்கு பிறந்தவளே" என்று திட்ட, அம்மாவைப் பத்தி தப்பா பேசியதால் ஆவேசம் கொள்ளும் இசக்கி, அரிவாளை பாண்டியம்மா கழுத்தில் வைத்து மரண பயத்தைக் காட்டுகிறாள். இங்கே வீட்டில் சாப்பாட்டில் காரம் கம்மியா இருக்க ஷண்முகம் காரணம் கேட்க, பரணி மிளகாய்த்தூள் காலி என்று சொல்ல, ஷண்முகம் “இப்போ தானே வாங்கி தந்தேன்” என்று சொல்கிறான்.
பாண்டியம்மா தனது ரூமில் உள்ள பாத்ரூமை கழுவ சொல்ல, இசக்கி “உன் பாத்ரூமை நீ தான் கழுவணும்” என்று கழுவ வைக்கிறாள். வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டியிடம் சனியன் விஷயத்தை சொல்லி கூட்டிப் போக, பாண்டியம்மா பாத்ரூம் கழுவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அடுத்து கனியால் சண்முகத்துக்கு “முத்துபாண்டியை அடித்தது இவங்க தான்” என்று தெரிய வர, என் தங்கச்சிங்க இப்படி தான் இருக்கனும் என்று சந்தோசப்படுகிறான். பிறகு துப்பாக்கி குறித்து கேட்க அது எங்களுக்கு தெரியாது என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Thalapathy Vijay: நேரில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய்: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோகிணி திரையரங்க ஓனர் மகன்