Watch Video Farina : ஆற்றங்கரையில் Maggi.. க்யூட்டான ரயில் வண்டி.. பாரதி கண்ணம்மா வெண்பாவின் வால்பாறை ட்ரிப்..
சீரியல் பார்ப்பவர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.
பலரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’. ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் முதல் இடத்தில உள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து அனைவரும் அறிவர். அந்த அளவிற்கு வில்லத்தனம் கொண்ட பாத்திரம் அது. சீரியல் பார்ப்பவர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.
View this post on Instagram
சீரியல் கதாபாத்திரத்துக்கு வேண்டுமானால் வெண்பாவுக்கு ஹேட்டர்ஸ் இருக்கலாம். ஆனால் ஃபரீனாவுக்கு ரசிகர்கள் அதிகம். அவர் பதிவிடும் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் ஹிட் அடிக்கும். அப்படியான ஒரு சின்ன ட்ரிப் வீடியோவை ஃபரீனா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வால்பாறைக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ள ஃபரீனா அது தொடர்பான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். ஆற்றின் ஓரத்தில் மேகி சமைத்து சாப்பிடுவது, தண்ணீரில் ட்ரெய்ன் வண்டி ஓட்டியது, குத்தாட்டம் என செம ஃபன்னாக இருந்துள்ளார் ஃபரீனா. அவருடைய வீடியோக்களுக்கு கமெண்ட் செய்துள்ள அவரது ரசிகர்கள் வில்லியின் குழந்தைத்தனம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
முன்னதாக, இன்ஸ்டாவில் கலந்துரையாடிய போது, ஃபரீனாவிடம் கேள்வி எழுப்பிய ஒருவர், "யூ முஸ்லீம் ரைட்..!!? அப்புறம் அடிக்கடி ப்ரே பண்ணுறீங்களா..!!? யூ ஆர் டூயின் ஹராம் திங் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடுமையாக பதிலளித்த நடிகை ஃபரீனா,” சமூக ஊடகத்தில் இருப்பது. டிவி சீரியல் பார்த்து, ஒரு பிரபலத்தைப் பின்தொடர்ந்து அவரிடம் கேள்வி கேட்பதுதான் ஹராம் பட்டியலில் முதல் இடம்! முதலில் உன்னை சுத்தம் செய்து கொள், பின்பு என்னிடம் வந்து கேள்! என்று பதிவிட்டிருந்தார்.