மேலும் அறிய

Serial Actor Arnav: காதல் மனைவி நடிகை திவ்யா துன்புறுத்தப்பட்ட வழக்கு...நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்

சின்னத்திரை நடிகர் அர்ணவ் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா. தற்போது திவ்யா கன்னடம் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்னவ்வுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

Serial Actor Arnav: காதல் மனைவி நடிகை திவ்யா துன்புறுத்தப்பட்ட வழக்கு...நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்

போலீஸில் அடுக்கடுக்காக புகார் :

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை தாக்கியதாகவும் அதனால் அவரின் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கர்ப்பிணி பெண்ணான தன்னை அடித்து துன்புறுத்தி தாக்கியதாகவும், வேறு ஒரு சீரியல் நடிகையோடு பழகி வருவதாகவும் அர்னவ் மீது அடுக்கடுக்காக போரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா.

View this post on Instagram
 
A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :

ஒரு கர்ப்பிணி பெண்ணை தாக்கியதற்காகவும், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேரில் ஆஜராக சொல்லியும் அர்னவ் வராத காரணத்தால் அக்டோபர் 14 ஆம் தேதி அவரை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அன்றும் ஆஜராகாத அர்னவ் தனது வழக்கறிஞர்  மூலம் தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18 ஆம் தேதி ஆஜராவதாக மனு அளித்தார். பின்னர் அர்னவ் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட போது அர்னவ்வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

View this post on Instagram
 
A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அர்னவ் :

அந்த வகையில் சின்னத்திரை நடிகர் அர்னவ் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்க உத்தரவிட்டதின் பேரில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

தலைப்பு செய்திகள்

Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!

Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!

Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

Embed widget