TRP Rating: டி.ஆர்.பி.யில் அதே இடத்தை தக்க வைத்துக் கொண்ட சீரியல்கள்! நிலவரம் என்ன?
TRP rating : 11வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சின்னத்திரை சீரியல்கள் தான். எத்தனை எத்தனை தொழிநுட்ப வளர்ச்சி வந்தாலும் சீரியல்கள் மீது சின்னத்திரை ரசிகர்களுக்கு இருக்கும் மோகம் குறையவே குறையாது. அதை நன்கு புரிந்து கொண்டுள்ள சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு வெரைட்டி வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி அசத்தி வருகிறார்கள்.
டி.ஆர்.பி. ரேட்டிங்:
அப்படி ஒளிபரப்பாகும் சீரியல்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை டி.ஆர்.பி ரேட்டிங் மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், ஒளிபரப்பாகும் நேரம், கதைக்களம், ப்ரோமோ என பல்வேறு கரணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் 11 வாரத்திற்கான டி.ஆர்.பி லிஸ்டின் படி ரசிகர்களின் விருப்பமான சீரியல் என்னென்ன என்பதையும் அதற்கு என்ன ரேட்டிங் கிடைத்துள்ளது என்பதையும் பார்க்கலாம் வாங்க :
ஒவ்வொரு வாரமும் முன்னணி இடத்தை எந்த ஒரு சேனலுக்கும் விட்டுக்கொடுக்காமல் நிலையாக முதலிடத்தில் இருந்து வருவது சன் டிவி தான். கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் ஐந்து இடத்தை சன் டிவி தான் தக்கவைத்துள்ளது. 11.06 புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே, 10.14 புள்ளிகளுடன் கயல், 10.01 புள்ளிகளுடன் எதிர்நீச்சல், 8.76 புள்ளிகளுடன் வானத்தை போல, 8.35 புள்ளிகளுடன் இனியா சீரியலும் இடம்பெற்றுள்ளன.
சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் மற்றொரு டிவி சேனல் என்றால் அது விஜய் டிவி தான். ரியாலிட்டி ஷோகளுக்கு விஜய் டிவி எந்த அளவுக்கு ஸ்பெஷலிஸ்டோ அதே போல வகைவகையான சீரியல்களை ஒளிபரப்புவதிலும் கில்லாடிகள். அந்த வகையில் ஆறாவது இடத்தை 8.32 புள்ளிகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை மீண்டும் சன் டிவி கைப்பற்றிவிட்டது. 8.22 புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த மூன்று இடங்களை விஜய் டிவி பிடித்துள்ளது. 7.27 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி, 6.36 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, 5.84 புள்ளிகளுடன் ஆஹா கல்யாணம் சீரியல் இடம்பெற்றுள்ளது.
இந்த டி.ஆர்.பி ரேட்டிங் வரிசை 11வது வாரத்திற்காக நிலவரம் மட்டுமே. இது கதைக்களத்தின் விறுவிறுப்பு தன்மையை பொருத்து முன்னே பின்னே மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரம் எந்தெந்த சீரியல்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.