HBD Tapsee Pannu : 36வது பிறந்தநாள் கொண்டாடும் டாப்ஸி பண்ணு பற்றிய சில ஸ்வாரஸ்யங்கள்...
ஆணாதிக்கம் மற்றும் பெண்ணியம் குறித்து வெளிப்படையாக பேசிய 'பிங்க்' திரைப்படத்தின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்ற டாப்ஸி பண்ணுவின் 36 வது பிறந்தநாள் இன்று.
மிகவும் போல்ட்டான இந்திய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை டாப்ஸி பண்ணுவுக்கென ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகமானோர் உள்ளனர். ஆணாதிக்கம் மற்றும் பெண்ணியம் குறித்து வெளிப்படையாக பேசிய 'பிங்க்' திரைப்படத்தின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்ற டாப்ஸி பண்ணுவின் 36 வது பிறந்தநாள் இன்று. இன்றைய தினத்தில் அவரை பற்றின சில ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
1 . பஞ்சாபி வம்சாவழியை சேர்ந்த டாப்ஸி பண்ணு தனது மயக்கும் அழகான சுருள் முடிக்கு பிரபலமானவர். அதனால் அவரின் பெற்றோரால் செல்லமாக மேகி என அழைக்கப்படுகிறார்.
2 . புது தில்லியில் உள்ள குரு தேக் பகதூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். சாஃப்ட்வேர் இன்ஜினீராக பணியாற்றிய டாப்ஸிக்கு மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் தான் அவரை சினிமாவில் கொண்டு சேர்த்தது.
3 . சஃபி மிஸ் ஃபெமினா மிஸ் பியூட்டிஃபுல் ஸ்கின் மற்றும் பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் என பல பட்டங்களை 2008ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் வென்றார்.
4 . 2010ம் ஆண்டு கே. ராகவேந்திர ராவின் இயக்கத்தில் வெளியான 'ஜும்மாண்டி நாதம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததுது மூன்று தெலுங்கு படங்களில் கமிட்டானார்.
5 . திரைப்பட துறையில் உள்ள மற்ற நடிகர் நடிகைகளை போல அல்லாமல் தன்னுடைய ஸ்டண்ட் காட்சிகளை தானே நடிக்கும் ஆற்றல் கொண்டவர். டாப்ஸி ஒரு தேர்ந்த பரதநாட்டியம் மற்றும் கதக் நடன கலைஞர். ஸ்குவாஷ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரத்தை விளையாட்டிற்காக ஒதுக்குகிறார்.
6 . 2011ம் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்து ஆறு தேசிய விருதுகளை பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
7 . 2013ம் ஆண்டு டேவிட் தவான் இயக்கத்தில் வெளியான 'சஷ்மே படூர்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
8 . டாப்ஸி தனது தங்கை ஷாகுன் பண்ணு மற்றும் பெஸ்ட் பிரெண்ட் ஃபரா பர்வரேஷ் உடன் இணைந்து "தி வெட்டிங் ஃபேக்டரி" என்ற ஈவென்ட் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
9 . கடந்த 2021ம் ஆண்டு தமிழில் 'அனபெல் சேதுபதி' திரைப்படத்தில் நடித்த பிறகு பாலிவுட் படங்களிலேயே அதிக அளவில் கவனம் செலுத்தி வந்தார். அதை தொடர்ந்து தற்போது பரத் நீலகண்டன் இயக்கத்தில் "ஏலியன்" என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
10 . டாப்ஸி பண்ணு நடிகர் ஷாருக்கான் உடன் இணையும் முதல் படமான டுங்கி வரும் டிசம்பர் 2023ம் வெளியாக உள்ளது.