ஆனந்த யாழை மீட்டிச் சென்ற நா.முத்துக்குமார்... சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்று கொண்ட மகன் ஆதவன்
2012ஆம் ஆண்டின் பல படங்களுக்கும், 2013 - தங்க மீன்கள், 2014 - சைவம் ஆகிய படங்களுக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.
2009 - 2014ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் விருதுகளை அவரது மகன் பெற்றுக்கொண்டது திரையிலகினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
2012ஆம் ஆண்டின் பல படங்களுக்கும், 2013 - தங்க மீன்கள், 2014 - சைவம் ஆகிய படங்களுக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில், இந்த விழாவில் மறைந்த நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
2009 - 2014ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.
விருது வழங்கிய அமைச்சர்கள்
இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மு.பெ. சாமிநாதன், மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் ஆர். ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.
இந்த விருது விழாவில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னதாக விக்ரம், நாசர், கரண் அஞ்சலி, சங்கீதா, தம்பி ராமைய்யா, சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்,நடிகைகள், பிரபு சாலமன், வெற்றிமாறன், பாண்டிராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள், இசையமைப்பாளர் இமான், மஹதி, கார்த்திக், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பின்னணிப் பாடகர்கள் எனப் பல கலைஞர்களும் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
மறைந்த இயக்குனர்களுக்காக வருத்தம்!
ஆனால் நயன்தாரா, அமலா பால் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் வெளிநாடுகளில் படப்படிப்பில் தற்போது இருப்பதால் விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விழாவில் மறைந்த இயக்குனர்களான கே.வி.ஆனந்த், ராசுமதுரவன் ஆகியோரின் அயன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விருதுகளை உடனுக்குடன் கொடுத்திருந்தால் அவர்கள் பெற்று மகிழ்ந்திருப்பார்கள் என சக கலைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.