Sunny Leone: மகாராணி சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி... இயக்குநர் சொன்ன சுவாரஸ்யத் தகவல்!
வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சன்னி லியோன் ஹீரோயினாக நடித்து தமிழில் விரைவில் வெளியாக உள்ள படம் ’ஓ மை கோஸ்ட்’. வா மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் - ஒய்ட் ஹார்ஸ் ஸ்டுடியோ தயாரித்து, ஆர்.யுவன் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சதீஷ், தர்ஷா குப்தா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரலாற்றுப் பின்னணியில் திகில் மற்றும் நகைச்சுவை ஜானரில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
View this post on Instagram
மாயசேனா என்ற மகாராணியாக சன்னி லியோன் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குநர் ஆர்.யுவன் தெரிவித்துள்ளார்.
மேலும் சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டதாகவும், படத்தில் காமெடி காட்சிகள் அதிகம் நிரம்பி இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தன்னுடன் நடிக்க இன்னும் திரையுலகில் சிலர் தயங்குவதாக சன்னி வருத்தம் தெரிவித்திருந்தார்.
கனடாவில் பிறந்த பஞ்சாபி பெண்ணான சன்னி லியோன், ஆபாசப் பட உலகில் இருந்து வெளியேறிய முன்னதாக இந்தியத் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார்.
2012 ஆம் ஆண்டு பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 மூலம் தனது பாலிவுட் பயணத்தை தொடங்கினார். தற்போது திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சன்னி லியோன் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
View this post on Instagram
இதற்காக அனுராக்குக்கு முன்னதாக நன்றி தெரிவித்துள்ள சன்னி லியோன், ”இன்னும் திரையுலகில் சிலர் என்னுடன் பணியாற்றத் தயங்குகிறார்கள் என்றும்,இவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த படத்திற்காக ஆடிஷன் செய்ய அனுமதித்த அனுராக் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.
இது வாழ்க்கையை மாற்றும் சரியான தருணம். அனுராக் போன்ற ஒரு இயக்குனருடன் பணிபுரிவது எனது கரியரின் முழு இயக்கத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன்” என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.