Little John Death: நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மரணம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்த லிட்டில் ஜான் மாரடைப்பால் உயிரிழ்ந்திருப்பதாக மருத்துவமனை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக நடித்து வந்த லிட்டில் ஜான் என்கிற தனசேகரன் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 43. 3 அடி உயரமான இவர், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வந்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்த அவர், மாரடைப்பால் உயிரிழ்ந்திருப்பதாக மருத்துவமனை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
லிட்டில் ஜான், திருச்செங்கோடு ஊரில்ந் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார். அடுத்த நாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அசைவின்றி இருந்த அவரது வாயில், மூக்கில் இரத்தம் கசிந்திருந்தது. அவரை மீட்ட நண்பர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், வழியில் மாரடைப்பு வந்து அவர் உயிரிழந்திருக்கிறார்.
அவரது மறைவிற்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிற முக்கியச் செய்திகள்:
#BREAKING குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்-தேர்வுத்துறை https://t.co/wupaoCzH82 | #anbilmahesh #school #portions #Exams #examcommission pic.twitter.com/cEOZvJmgqB
— ABP Nadu (@abpnadu) April 6, 2022
#BREAKING | அமலாக்கத்துறை சம்மன் அளித்தால் கண்டிப்பாக ஆஜராவேன் - டிடிவி தினகரன்https://t.co/wupaoCQKa2 | #ED #TTVDhinakaran #AIADMK pic.twitter.com/qWY91cYybL
— ABP Nadu (@abpnadu) April 6, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்