Surya 42 : இலங்கைக்கு ஜூட் விடும் சூர்யா 42 டீம்... 60 நாட்கள் காடுகளில்.. வாவ் அப்டேட்..
இயக்குநர் சிவா இயக்கும் நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு பறக்க உள்ளனர் படக்குழுவினர்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 42-வது திரைப்படத்துக்கு தற்காலிகமாக 'சூர்யா 42 ' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் கோவா மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. இப்படம் குறித்த தகவல்கள் திரை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சூர்யா 42 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு பறக்க உள்ளனர் படக்குழுவினர். இலங்கை நாட்டின் வனப்பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சுமார் 60 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழமையான கதை :
1000 ஆண்டு கால பழமையான கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் நிகழ் காலத்தின் படப்பிடிப்பு கோவாவில் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஒரு சில நாட்களில் இலங்கையில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் மும்மரமாக நடைபெற உள்ள சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2023-இல் முடிக்க திட்டமிட்டுள்ளனர். மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்கபடும் இப்படம் 3டி பீரியாடிக் திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது. நடிகர் சூர்யா ஜோடியாக இணைகிறார் பாலிவுட் நடிகை திஷா பதானி.
#Suriya42 next schedule to begin in Srilanka & going to shoot 1000 years back periodic portions💥
— AmuthaBharathi (@CinemaWithAB) November 24, 2022
In Goa they have completed present portions !!#Suriya's look in the periodic portion going to be 🔥🔥 pic.twitter.com/KrLRAdw2Rd
இன்டர்நேஷனல் லொகேஷன் தேர்வு :
மேலும் சூர்யா 42 படக்குழுவினர் வெளிநாடுகளில் லொகேஷன் தேர்வினை நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் பெரும் பகுதி மூன்று சர்வதேச நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா மற்றும் செர்பியாவை தேர்வு செய்துள்ளனர். அவற்றை தவிர கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி நாடுகளையும் தங்களின் லிஸ்ட்டில் வைத்துள்ளனர். இந்த 6 நாடுகளில் ஏதேனும் 3 நாடுகளை ஃபைனலைஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Suriya42 Audio Rights Will Be Record Breaking Price In Kollywood , Already The Digital Rights Sold For ₹110Crs+ !!
— Thunder ツ (@Thunderbird_SFC) November 24, 2022
Thalaivan @Suriya_offl Sambavam 😎🔥..!!#EtharkkumThunindhavan @directorsiva pic.twitter.com/8riIXQJBPh
மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் சூர்யா 42 திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என தெரிகிறது. சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமை கோலிவுட் படங்களின் வரிசையில் புதிய ரெகார்ட் ஒன்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் டிஜிட்டல் உரிமை 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யாவின் இந்த திரைப்படமும் ஒரு சம்பவத்தை செய்ய போகிறது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.