Surya Vadivasal : சூர்யா.. காளைமாடு.. வாடிவாசல்.. வெற்றி மாறன் பகிர்ந்த ஷார்ப்பான ரகசியங்கள்..
இயக்குநர் வெற்றிமாறனுக்கு டைரக்டர் ஆஃப் தி டிகேட் வழங்கப்பட்டது. இதனையடுத்து பேசிய அவர், எனக்கு இந்த விருது கொடுக்கப்பாறங்க என்று கேட்டவுடன் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
இயக்குநர் வெற்றிமாறனுக்கு டைரக்டர் ஆஃப் தி டிகேட் வழங்கப்பட்டது. இதனையடுத்து பேசிய அவர், எனக்கு இந்த விருது கொடுக்கப் போறாங்க என்று கேட்டவுடன் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. நாம் என்ன அவ்வளவு பெரிய ஆளா எனத் தோன்றியது. இப்போது இந்த விருதை வாங்கும்போது கூட நான் இன்று தான் பயணத்தை ஆரம்பிப்பதாக நினைத்துக் கொள்கிறேன் என்றார்.
காளை வளர்க்கும் சூர்யா:
இப்போது சூர்யாவுடன் வாடிவாசல் செய்கிறேன். அவர் அர்ப்பணிப்புடன் நடிக்கிறார். இதற்காக வீட்டிலேயே ஒரு காங்கேயம் காளையும், ஒரு நாட்டுப் பசுவும் வளர்த்து வருகிறார். நிறைய மாடுபிடி வீரர்களுடனும் பழகி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடிவாசல் படத்தில் இணைந்திருக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்படுகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேர்மையான இயக்குநர்: மிஷ்கின் பாராட்டு:
இந்த விருது நிகழ்சியில் மிஷ்கின் வெற்றிமாறனை மனம் திறந்து பாராட்டினார். மிஷ்கின் ஒரு தனித்துவமான இயக்குநர். என்னிடம் உதவியாளராக இருந்தபோதே வெற்றி மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுவான், நேர்மையான இயக்குநராக வருவான் என்று எனக்குத் தெரியும். வெற்றியை எனக்கு எப்பவுமே ரொம்பப் பிடிக்கும். அவனுடைய எல்லா படங்களும் மைல்ஸ்டோன்தான். சினிமாவில் எப்படி இருக்கிறானோ, என்ன மாதிரியான சினிமாவை யோசிக்கிறானோ அதே மாதிரி தான் இருக்கிறார். வெற்றியின் உயர்வுக்குப் பின் கடுமையான தீர்க்கமான உழைப்பு இருக்கிறது. வெற்றிக்கு இந்த விருதைக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அனுராக் கஷ்யப்பின் பாராட்டு:
இந்த விருது பெற்றதற்காக உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் மட்டும்தான் இந்த தசம ஆண்டுக்கான இயக்குநர் (டிரக்டர் ஆஃப் தி டிகேட்). உங்களது படைப்புகள் கவித்துவமானவை, துணிச்சலானவை. உங்களை விரைவில் நேரில் சந்திப்பேன் என்று அனுராக் கஷ்யப் கூறினார்.
தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், அனுராக் கஷ்யப் மாற்று சினிமாவின் முகம் என்று பாராட்டினார். மேலும் பேசுகையில், அனுராக் கஷ்யப் இந்தி சினிமாவில் மட்டுமல்ல எல்லா சினிமாக்களிலும் இருக்கும் சிறந்த படைப்பாளிகளைக் கண்டு அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர உதவுவார். என்னுடைய திரைப்படங்கள் வெனிஸ் ஃபில்ம் ஃபெஸ்டிவலில் திரையிட உதவியவர் அவர்தான். அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடைய பாராட்டு எனக்கு ரொம்ப ஊக்கமளிக்கிறது என்றார்.
வார்த்தை தவறாதவர்:
கலைப்புலி எஸ்.தானு பேசும்போது, ”வெற்றிமாறன் வார்த்தை தவறாதவர் என்றார். அசுரன் பண்ணும்போது டெங்கு காய்ச்சலில் தவித்துக் கொண்டிருந்தார். நான் கூட உங்கள் உடல்நிலை சரியில்லை நீங்கள் ஓய்வெடுங்கள் என்றேன். ஆனால் அவரோ நான் வார்த்தை கொடுத்துட்டேன், முடிச்சுக் கொடுத்துடுறேன்னு சொன்னார். அதுதான் அவர் வெற்றிக்கு காரணம். தென்னிந்திய, வட இந்தியா நடிகர்கள் எல்லாம் வெற்றிமாறன் கூட படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்” என்று புகழ்ந்து தள்ளினார். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், அவ்வளவு புகழுக்கு தகுதியானவன் அல்ல. நான் மக்களின் வாழ்வியலைப் படம் பிடிக்கும் எளியவன். பாலுமகேந்திரா சார் சொல்வார் ஒரு படத்தின் வணிக ரீதியிலான வெற்றி ஒரு விபத்து என்பார். அதை நானும் நம்புகிறேன். நாம் பெஸ்ட் கொடுக்க வேண்டும். மற்றது தானாக அமையும் என்றார்.