Etharkum Thunindhavan First Single: வாடா தம்பி.. வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் First Single..
எதற்கும் துணிந்தவன் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துவந்தார். இவருக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை ப்ரியங்கா அருள் மோகன் நடிக்க சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசை அமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்தான் எதற்கும் துணிந்தவனாக படமாகிறது என தகவல்களும் வெளியாகின. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
எதற்கும் துணிந்தவன் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஜெய் பீம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
#ETFirstSingle #VaadaThambi lyric video is here:
— Sun Pictures (@sunpictures) December 15, 2021
▶ https://t.co/o7L3QBNvaH
An @immancomposer musical
🎙@gvprakash & @anirudhofficial
🖊@VigneshShivN@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ET
இந்நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும் வாடா தம்பி என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. டி. இமான் இசையில் ஜி.வி. பிரகாஷும், அனிருத்தும் பாடியிருக்கின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் வைரலாகிவருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Thangamani Raid | முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : ரூ.2.16 கோடி பறிமுதல்
EDISON AWARDS | மாஸ்டர் முதல் மாநாடு வரை... எடிசன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் லிஸ்ட்!
ஓ சொல்றியா மாமா..ம்ஹும் சொல்றியா.. வழக்கு போட்ட அமைப்பு.. காரணம் தெரியுமா?
Rajinikanth | தொடர் ஹிமாலய வெற்றி.. எப்படி சாத்தியப்படுத்துகிறார் ரஜினி? - தயாரிப்பாளர் தனஞ்செயன்