மின்னல் முரளி பட இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா...வெளியான மாஸ் அப்டேட்
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைபடத்தை மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான பாசில் ஜோசப் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சூர்யா
நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்று சொல்லலாம். ஓடிடியில் வெளியான ஜெய் பீம் , சூரரைப் போற்று படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தாலும் திரையரங்கில் அவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை. எதற்கும் துணிந்தவன் , கங்குவா என அடுத்தடுத்து இரு படங்கள் மெகா சொதப்பலாக அமைந்தன. அடுத்த ஹிட் படத்தைக் கொடுத்து சூர்யா எப்போது கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ரெட்ரோ
தற்போது சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , பிரகாஷ் ராஜ் , கருணாகரன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பின் ஆக்ஷன் த்ரில்லராக ரெட்ரோ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். வரும் மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
சூர்யா 45
அடுத்தபடியாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படம் உருவாகி வருகிறது. த்ரிஷா நாயகியாக நடிக்க சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
சூர்யா 47
ஏற்கனவே சூர்யாவின் இரு படங்களை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு உற்சாகமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 47 ஆவது படத்தை மலையாள நடிகர் மற்றும் இயக்குநருமான பாசில் ஜோசப் இயக்கவிருப்பதே அந்த தகவல் . மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த மின்னல் முரளி படத்தை இயக்கி கவனமீர்த்தவர் பாசில் ஜோசப் . திரைப்படங்கள் இயக்குவது தவிர்த்து தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் நஸ்ரியா நடித்து வெளியான சூக்ஷமதர்ஷினி படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது சூர்யா படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்க இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்
Exclusive : @Suriya_offl na & @basiljoseph25 project is on 🔥😍#Suriya47 - A Superhero subject 🔥🥵
— ROLEX Hari (@harimasss24) January 27, 2025
Thalaivan lineups 🔥🔥#Retro #Suriya45 #VaadiVaasal pic.twitter.com/6OOozSM0Wf
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

