மேலும் அறிய

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்! சிபிஎஸ்இ அதிரடி!

  ஆசிரியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்; அதிரடி காட்டும் சிபிஎஸ்இ- என்ன காரணம் தெரியுமா?

மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, தனக்குக் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பணியில் ஈடுபடாத பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் மனநலப் பயிற்சி வழங்கப்படுவதை கட்டாயம் ஆக்கி உள்ளது.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 முறை இந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கும் மன நலத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

சான்றிதழ் பெறப்பட்ட மனநல நிபுணர்கள் இந்த பயிற்சியை நடத்த வேண்டும் எனவும் இந்த வகுப்புகளில் உளவியல் சார்ந்த முதலுதவிகள், எச்சரிக்கை சமிக்ஞைகளை அறிந்து கொள்ளுதல், சுய-தீங்கு சூழ்நிலைகளைக் கையாளுதல் மற்றும் பரிந்துரை வழிமுறைகள் பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்களைக் கையாள்வது குறித்து பயிற்சி

வாரியத்தின் அடிப்படை அறிவிக்கையின்படி, கற்பிக்கும், கற்பித்தல் அல்லாத பிற பணிகளில் ஈடுபடும், நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் மாணவர்களைக் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய வகையில், அறிவுப்பூர்வமான வகையில் பேதமில்லாமல் மாணவர்களை நடத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல, பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் கூட, கூடுதல் மனநலம் சார்ந்த பயிற்சியை வழங்க சுற்றறிக்கை அறிவுறுத்தி உள்ளது. மன அழுத்தம் சார்ந்த சிக்கலை கையாள்வது எப்படி? மன நல அறிவு, உணர்வுகளைக் கையாளுதல், வாழ்க்கை திறன் கல்வி ஆகியவையும் இதில் இணைக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு 2 முறை பயிற்சி

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 முறை இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கும் மன நலத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள், மாணவர் நடவடிக்கைகள் மற்றும் அதுதொடர்பான உள்ளீடுகள் குறித்த ஆண்டு அறிக்கையை தயார் செய்து வைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல விளையாட்டு, கல்வி, ஆளுமை மேம்பாடு மற்றும் தேர்வு நடைமுறை உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சான்றிதழ் பெற்ற கவுன்சிலர்கள் வழியாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு கேரியர் கவுன்சிலிங் வழங்கவும் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget