பிப்ரவரி 1, 2025 அன்று 2025-26-கான மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ளது.
மோடி ஆட்சியில் புதிய வருமான வரி முறைகள் கொண்டு வரப்பட்டது.அதனால் வருமான வரி விகிதங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளது.
மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆராய்ச்சி திறன் மற்றும் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க, ஆராய்ச்சி உபகரணங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
நிதிச் சீர்த்திருத்தங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், காலநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு பட்ஜெட் ஒதுக்கினால் விவசாயம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளித்துறைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை வலுக்கிறது
வருமான வரியை குறைத்து அவற்றை எளிமைப்படுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரியை குறைக்க வேண்டும்.
தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி விலையை குறைத்தால் தான் அவற்றின் விலை குறையும் என்று மக்கள் கூறுகின்றனர்.
நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் உள்ளது.
மக்களின் நுகர்வு அதிகரிக்க ஜி.எஸ்.டி வரியை குறைக்கவேண்டும். இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்களிப்பு அளிக்கும் ஸ்டார்ட் அப்-களை ஊக்குவிக்க திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
கிராமப்புறங்களை மேம்படுத்த திட்டங்களும், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.