மேலும் அறிய

சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன்..வன்மத்தை கக்குபவர்கள் ஜாக்கிரதை..ஹைப் ஏற்றிய நந்தன் பட இயக்குநர்

தாய்கிழவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பி இயக்குநர் இரா சரவணன் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது

தாய்கிழவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நந்தன் படத்தின் இயக்குநர் இரா சரவணன் சிவகார்த்திகேயனுக்கு எதிராக வன்மத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு ஒரு செய்தி சொன்னார். கெளுத்தி மீனை சாப்பிடும் கொக்கு அந்த மீனின் முட்கள் குத்தி இறந்துவிடும் அதே போல் சிவகார்த்திகேயனை வீழ்த்த காத்திருப்பவர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் என்பதை நான் சொல்லிக்கொள்கிறேன் என இரா சரவணன் இந்த மேடையில் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சிவகார்த்திகேயன் தயாரித்து ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் குறித்து நந்தன் திரைப்பட இயக்குநர் இரா சரவணன் பேசியபோது இப்படி கூறினார்.

சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் 

"மனிதர்களில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்கள் பெரும் பணம் படைத்தவர்களோ , அரசியல்வாதிகளோ கிடையாது. கனிக்க முடியாதவர்களாகும் யூகிக்க முடியாதவர்களாகவும் எடை போட முடியாதவர்களாகவும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த மண்ணில் நிரப்புவார்கள். நான் ஒரு பத்திரிகையாளனாக 10 வருடம் பணியாற்றி இருக்கிறேன். சினிமாவில் ஒரு 10 வருடம் இருந்திருக்கிறேன். இந்த 25 ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை , தலைவர்களை பார்த்து கடந்திருக்கிறேன். என்னால் கனிக்கவே முடியாத ஆள் என்றால் அது சிவகார்த்திகேயன். இப்போ தேர்தல் நேரத்தில் எந்த கட்சி எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று கேட்டால் என்னால் சொல்லிவிட முடியும் ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்த எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என்று கேட்டால் என்னால் மட்டுமில்லை இந்த துறையில் உள்ள யாராலும் கனிக்கவே முடியாது. ஏனால் சிவகார்த்திகேயன் அடுத்து யாரை வைத்து படம் நடிக்க போகிறார் என்று ஒரு 10 இயக்குநர்களின் பெயர்களில் இல்லாத சிவகுமார் முருகேசனை தேர்வு செய்தார். நேற்று அந்த படம் பார்த்தேன். ராதிகா மேடம் நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் மொத்த தமிழ் சினிமாவும் சேர்ந்து அவருக்கு திருஷ்டி சுற்றினாலும் அவரது நடிப்பிற்கு தகும். படம் ஆரம்பித்தது முதல் முடிவது வரை வயிறு குலுங்க சிரிக்க முடிந்தது. பகுத்தறிவு கருத்து தொடங்கி , மண் சார்ந்த விஷயங்கள் தொடங்கி பல விஷயங்களை அசால்ட்டாக கையாண்டிருக்கிறார்கள். நல்ல திரைக்கதைக்கு ஹீரோக்கள் தேவையே இல்லை. அதில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரங்களும் ஹீரோக்கள் தான். ஹீரோக்கள் பின்னாடியே ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா இனிமேல் இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து மாறும் . 

சிவகார்த்திகேயன் பற்றி ஒரே ஒரு விஷயம் முக்கியமாக சொல்லனும். கொட்டுக்காளி படம் வெளியானபோது அவரை நான் சந்திக்க போயிருந்தேன். படம் ஜெயித்தால் நான் சம்பாதித்துவிட்டு போகிறேன். தோற்றால் நான் கடனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த படம் வரலாமா என்று எப்படி கேட்கிறார்கள் என்றார். அதற்கு அப்பால்பட்டும் ஒரு சில விமர்சனங்கள் . நடிச்சோமா சம்பாதித்தோமா எதுக்கு இவருக்கு இந்த தயாரிப்பு வேலை. அந்த வீடியோ எல்லாம் பார்த்து சிவகார்த்திகேயன் அமைதியாக ஒரு சின்ன சிரிப்பு மட்டும் சிரித்தார். அந்த சிரிப்பிற்கான பதில்தான் இந்த தாய்கிழவி படம் . 

விமர்சனங்களை சிவகார்த்திகேயன் எப்போதும் ஏற்றுக்கொள்பவர். ஆனால் வன்மம் நிறைந்த விமர்சனங்களுக்கு அவர் எப்போதும் பதில் சொன்னதே இல்லை. கொக்கு எப்போதும் கெளுத்தி மீன்களை சாப்பிடுவதில்லை.  கெளுத்தி மீனில் இருக்கும் முல் அந்த கொக்கின் வயிற்றை கிழித்துவிடும். வன்மங்களால் சிவகார்த்திகேயனை வீழ்த்த காத்திருக்கும் ஆயிரம் கொக்குகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன் சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் " என்று இரா சரவணன் பேசினார். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget