தயாரிப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
ஏ. ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் ‛99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியராக அறிமுகம் ஆகியுள்ள
படம் 99 சாங்ஸ். ஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது பாடல்கள் அனைத்துமே வைரல் ஹிட் . ரஹ்மான் இசையமைப்பில் மொத்தம் 14 பாடல்கள் படத்தில் உள்ளன .
இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது என்பது அனைவரும் அறிந்ததே .
படத்தின் ஹிந்தி வசங்களை ஹுசைன் தலால் , தமிழில் கவுதம் மேனன் மற்றும் தெலுங்கில் கிரண் ஆகியோர் எழுதியுள்ளனர் . மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . இன்று படம் வெளியாவதை தொடர்ந்து திரையுலக நடிகர்கள் அனைவரும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

Wishing you the very best always and for the release of your film #99Songs dear @arrahman ji. May god bless you pic.twitter.com/WEWc1uKbSp
— Rajinikanth (@rajinikanth) April 16, 2021

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் 99 சாங்ஸ் போஸ்ட்டரை பகிர்ந்து தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

Best wishes dearest @arrahman sir for the super success of #99Songs 🤗 hope it’s a smash 😄 pic.twitter.com/C7FTG3JyVI
— Anirudh Ravichander (@anirudhofficial) April 16, 2021

இதை தொடர்ந்து இசைமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .