எஸ்பிபி மறைவுக்கு நான் காரணமாகிவிட்டேன்... குற்ற உணர்ச்சியில் பொங்கிய சீரியல் பிரபலம்!
பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சுபலேகா சுதாகர்... எஸ்பிபி மறைவுக்கு ஒரு வகையில் நானும் காரணம் என்று குற்ற உணர்ச்சியில் பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பிறந்து வளர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். தன்னுடைய பாடல்கள் மூலம் சினிமாவில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தனது இனிமையான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை என்ற எஸ்பிபி... பின்னணி பாடகர் என்பதை தாண்டி, நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், இசையமைப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமையாளராக ரசிகர்களால் அறியப்பட்டவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று 16 மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். ஒரே நாளில் கன்னட மொழியில் 28 பாடல்கள், தமிழில் 19 பாடல்கள், இந்தியில் 16 பாடல்கள் பாடி சாதனை படைத்தவர். இந்த நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு... அதில் இருந்து குணமடைந்தாலும் உடல் நிலை சீராவதற்கு முன்பே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைந்து 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது மறைவுக்கு தானும் ஒரு விதத்தில் காரணம் என்று, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சுபலேகா சுதாகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "எஸ்பிபி எனக்கு மைத்துனர். ஆனால், நான் அவரை சார் சார் என்று தான் கூப்பிடுவேன். கோவிட் காலத்தில் ஹைதராபாத்தில் பிலிம் சிட்டியில் தொலைக்காட்சி தொடர் ஒன்று எடுக்கப்பட்டது. அதில், பாதுகாப்பு நன்றாக இருக்கிறது. உடனே புறப்பட்டு வாங்க சார் என்றேன்.
அவரும் வந்தார். அப்போது தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நான் மட்டும் வரவைக்காமல் இருந்திருந்தால் அவர் வீட்டிலேயே இருந்திருப்பார். அதை நினைத்து பார்க்கும் போது அவரது மறைவுக்கு ஒருவகையில் நானும் ஒரு காரணம் என்று குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது என்று கூறியிருக்கிறார். சாகும் வரை அந்த குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















