மேலும் அறிய
சுப்ரமணியபுரம் படம் 'மொக்கச்சாமி' நடிகர் இலைக்கடை முருகன் காலமானார்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் மொக்கைச்சாமி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை இலைக்கடை முருகன் தனது வயது 78 வயதில் காலமானார்

சுப்ரமணியபுரம் , இலைக்கடை முருகன் ,
Source : Twitter
நடிகர் இலைக்கடை முருகன் காலமானார்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து மக்களிடம் கவனமீர்த்தவர் நடிகை இலைக்கடை முருகன். இந்த படத்தில் இவர் நடித்த மொக்கச்சாமி என்கிற கதாபாத்திரம் பட்டிதொட்டி எல்லாம் பேசப்பட்டது. சுப்ரமணியபுரம் படம் தவிர்த்து விஜயின் வேலாயுதம் , கார்த்தியின் கொம்பன் மற்றும் விஷாலின் தோரனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்தபின் மதுரை மாட்டுத்தாவனியில் இலைக்கடை நடத்தி வந்தார் . இப்படியான நிலையில் இலைக்கடை முருகன் மாரடைப்பால் தனது 78 ஆவது வயதில் காலமானார். அவரது இறப்புக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















