Soundarya Rajiniknath | ‛அப்பா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்தான் காரணம்...’ - ரகசியம் உடைத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!
ஒரு முறை அவர் அரசியல் வருகையை முன்னிட்டு தனது மகளிடம் இப்படியான வரிகளை ட்வீட்டாக போடும்படி வாய்ஸ் நோட் ஒன்றை மகள் சௌந்தர்யாவிற்கு அனுப்பியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் , தலைவா என அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். பத்திரிக்கையாளரான லதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே தனது அப்பா மீது அதிகமான பாசம் கொண்டவர்கள். ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கையை அவரது ரசிகர்கள் பின்பற்றுவது பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் தனது அப்பா மூலமாகத்தான் எனக்கு இந்த ஐடியா கிடைத்தது மேடையில் , தனது இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் இளைய மகள் சௌந்தர்யா.
View this post on Instagram
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா விசாகன் அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலாவுடன் இணைந்து ஹூட் என்ற புதிய செயலியை எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கும் நோக்கில் வடிவமைத்துள்ளார்.இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவுடன், டெல்லியில் இருந்தபடியே இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்தினார்.அந்த குரல் பதிவில், “இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. வரும் காலங்களில் இந்த செயலி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்போல் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.
View this post on Instagram
இந்த ஹூட் செயலிக்கான ஐடியா ரஜினிகாந்திடம் இருந்துதான் வந்ததாம் . ரஜினிகாந்த தமிழ், கன்னடம் , ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை படிப்பாராம். ஆனால் அவருக்கு தமிழில் எழுத தெரியாதாம் . தமிழக சூப்பர் ஸ்டார் ஆனால் தமிழில் எழுத தெரியாது என்பது கொஞ்சம் வேதனையான விஷயம்தான். ஒரு முறை அவர் அரசியல் வருகையை முன்னிட்டு தனது மகளிடம் இப்படியான வரிகளை ட்வீட்டாக போடும்படி வாய்ஸ் நோட் ஒன்றை மகள் சௌந்தர்யாவிற்கு அனுப்பியுள்ளார். அதனை கேட்ட சௌந்தர்யா ஃபேன் கேர்ளாக மாறிப்போனாராம். தலைவா...என மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்ட சௌந்தர்யாவிற்கு பின்னர்தான் இப்படியான் பிரபலங்களில் குரல்களை எளிய மக்களும் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்ற நோக்கத்தில்தான் ஹூட் செயலியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.