Explurger App: சோனு சூட் தொடங்கியுள்ள புதிய சோஷியல் மீடியோ.. `எக்ஸ்ப்ளர்கர்’ App-இல் என்ன ஸ்பெஷல்?
`எக்ஸ்ப்ளர்கர்’ என்ற பெயரில் புதிதாக சமூக வலைத்தள செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதன் சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன..
`எக்ஸ்ப்ளர்கர்’ என்ற பெயரில் புதிதாக சமூக வலைத்தள செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
பயணம், லைஃப்ஸ்டைல் முதலானவற்றில் அதிக கவனம் செலுத்தும் இந்த செயலி மூலமாக பயனாளர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் ஆன்லைனில் கனெக்ட் செய்யவும், தங்கள் வாழ்வின் தருணங்களைப் பகிரவும் பயன்படுத்தலாம். இந்த செயலியின் இணை நிறுவனரான நடிகர் சோனு சூட் இருக்கும் நிலையில், இதன் நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஜிதின் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெறும் செக்-இன் மட்டுமின்றி பிற அம்சங்களைப் பயன்படுத்தும் விதமாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக, `எக்ஸ்ப்ளர்கர்’ செயலியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன..
வெறும் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஷேர் செய்வது மட்டுமின்றி, பயனாளர்கள் பயணித்த மைல் தூரம், நகரங்கள், நாடுகள், கண்டங்கள் முதலானவற்றைக் கணக்கில் கொள்ளவும் இந்த செயலி பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்கள் பக்கெட் லிஸ்டை உருவாக்குவது, விரிவான பயணக் குறிப்புகளை எழுதுவது, வருங்காலப் பயணத் திட்டத்தைப் பகிர்வது முதலானவற்றை இந்த செயலி மூலமாக மேற்கொள்ளலாம்.
View this post on Instagram
முதல்முறையாக சமூக வலைத்தள அனுபவத்தை கேமிங் வடிவத்தில் மாற்றியுள்ள செயலியாகவும் எக்ஸ்ப்ளர்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரிவார்ட் செக்ஷன் மூலமாக பயனாளர்கள் டாடா ஸ்கை, ஹாம்லீஸ், லைஃப்ஸ்டைல், லெனோவோ, ஃபேர்ன்ஸ் என் பெட்டல்ஸ் முதலான பிரபல நிறுவனங்களில் ஷாப்பிங் செய்வதற்கான டிஸ்கவுண்ட், கூப்பன் முதலானவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் செயலிகளுக்குக் கிடைக்கிறது. இதன் பீட்டா வெர்ஷனை ஏற்கனவே சுமார் 40 நாடுகளில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்