எல்லாமே சூப்பர் சாங்ஸ்.. இரவு நேரத்தை சிறப்பாக்கும் மோகன் ப்ளே லிஸ்ட் !
இரவு நேரத்தை அழகாக்கும் நடிகர் மோகனின் பாடல்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் பாட்டிற்கு பெயர் போன நடிகர் என்றால் அது நம் மோகன் தான். இசைஞானி இளையராஜாவின் இசையில் மோகன் நடித்திருந்தால் அந்தப் பாடல் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று தைரியமாக சொல்லலாம். அப்படி இருக்கும் மோகன்- இளையராஜாவின் கூட்டணி. திரைப்படங்களில் சில பாடல்களில் இவர் ஒரு மைக் வைத்து பாடுவது போல அமைந்திருக்கும். ஒரு நடிகருக்கு பாடல் ஹிட் அடித்தது முதல் முறையாக அவருக்கு தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட மோகன் நடிப்பில் வெளியான சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. நிலாவே வா:
மௌனராகம் திரைப்படத்தில் மோகன் ரேவதி நடிப்பில் இடம்பெற்ற பாடல் இது. எஸ்பிபி இப்பாடலை பாடியிருப்பார். இளையராஜாவின் இசை பாடலுக்கு அதிக வலு சேர்த்து இருக்கும்.
"காவேரியா
கானல் நீரா பெண்ணே
என்ன உண்மை
முள்வேலியா
முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம்
நில்லு அம்மாடியோ
நீ தான் இன்னும் சிறு்
பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன
சொல்லை.."
2. வா வெண்ணிலா:
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அமைந்த மெல்ல திறந்தது கதவு திரைப்படத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. எஸ்பிபி மற்றும் ஜானகி குரலில் இந்தப் பாடல் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும்.
"எனைச்சேர
ஆஆஆஆஆஆஆஹா
எனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜென்மம்
ஏங்கினேன்..."
3. இளைய நிலா:
மோகன் நடிப்பில் வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எஸ்பிபி-இளையராஜா- மோகன் கூட்டணி அமைந்த மற்றொரு நிலவு பாடல் இது.
"வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்.."
4. மலையோரம் வீசும் காற்று:
மோகன், நதியா நடிப்பில் வெளியான திரைப்படம் பாடு நிலாவே. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய மற்றொரு சிறப்பான பாடல் இது.
"வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா.."
5. சங்கீத மேகம்:
மோகன்- ரேவதி நடிப்பில் வெளியான உதய கீதம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார். எஸ்பிபி இப்பாடலை பாடியிருப்பார். இப்பாடலில் இளையராஜாவின் இசை மற்றும் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
"போகும் பாதை
தூரமே வாழும் காலம்
கொஞ்சமே ஜீவ சுகம்
பெற ராக நதியினில் நீ
நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்...."
இவை தவிர பல ஹிட் பாடல்களை ஒரு சனம், மன்றம் வந்த தென்றலுக்கு உள்ளிட்ட பல ஹிட் பாடல்கள் மோகன் நடிப்பில் வெளியாகியுள்ளது. இவற்றை அடிக்க ஒரு நாள் போதாது.
மேலும் படிக்க: இரவிற்கு இன்பம் சேர்க்கும் பி.சுசீலாவின் ப்ளே லிஸ்ட் !