'4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்
"நான் வந்து இந்த விஷயத்தில் மௌனம்தான் காக்க வேண்டும். அவங்க இருவருமே 4 வருடங்கள் காத்திருந்தாங்க."
சிவக்குமார் :
கோலிவுட்டில் ஒரு குடும்பம் அதிகம் உற்றுநோக்கப்படுகிறது என்றால் அது சிவக்குமாரின் குடும்பம்தான். சினிமா நடிகர் என்றாலே கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருக்காதுதானே ! ஆனால் அதில் எல்லாம் சிக்காமல் கிராமத்து மனிதராக எளிமையாக வாழ்பவர் சிவக்குமார். தனது மகன்கள் சூர்யா , கார்த்தியையும் , மகள் பிருந்தாவையும் அப்படியாகத்தான் வளர்த்திருக்கிறார். இருவருமே படம் நடிப்பதை தாண்டி சமுதாய அற்பணிப்புடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. சூர்யா ஜோதிகாவை காதலித்தபொழுது அவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்தவர் சிவக்குமார். 4 வருட பிடிவாத காதல்தான் தன்னை மனம் இறங்க வைத்தது, ஜோதிகாவை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிவக்குமார் இப்போது மேடைகளில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தான் காதலை எதிர்த்தது தவறுதான் என சித்ரா லக்ஷ்மண் உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
”கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டான் “
”எனக்கு ஒரு சிக்கல் என்னென்னா...நான் நடித்த 150 படங்களில் காதல் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்போது அப்பா மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார். அப்போ நாம ஒரு பொண்ணை காதலித்தால் அவர் எதிர்ப்பார் . அதற்கு நாம உன்னுடைய எதையும் நம்பி நான் காதலிக்கவில்லை. என்னுடைய கரங்களை நம்பிதான் காதலித்தேன்னு வசனங்கள் எல்லாம் பேசிட்டு, 150 பெண்களை காதலித்துவிட்டு . மகன் ஒரே ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றதும் வேண்டாம் என சொன்னால் என்ன நியாயம், அதில் தர்மமே இல்லை என எனக்கு தோன்றியது.நான் வந்து இந்த விஷயத்தில் மௌனம்தான் காக்க வேண்டும். அவங்க இருவருமே 4 வருடங்கள் காத்திருந்தாங்க. திருமணம் செய்தால் ஒருவரை ஒருவர் செய்துக்கொள்கிறோம் . இல்லையென்றால் இப்படியே இருந்துவிடுகிறோம் என்றார்கள் . அதன் பிறகு சம்மதித்தேன் “ என்றார்.
சூர்யா- ஜோதிகா இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். அந்த சமயத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணமாக இருந்தது இவர்களின் திருமணம்தான். ஜோதிகா அணிந்திருந்த பிங் நிற திருமணப்புடவையும் கூட பலரை வெகுவாக கவர்ந்தது. தற்போது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சூர்யா- ஜோதிகா தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram