அதிகமுறை தேசிய விருது வாங்கிய தமிழ் பின்னணிப் பாடகர்கள்! எஸ்பிபியை விட இவர் அதிகமா?
நடிகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு இணையாக பின்னணி பாடகர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளும் கவனிக்கப்படுகின்றன.
தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்க திரைப்பட விருதாகும். கிட்டத்தட்ட 69 வருடங்களாக கொடுக்கப்பட்டு வரும் இந்த விருதுகள் வருடா வருடம் பெரும் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்கும். இதில் நடிகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு இணையாக பின்னணி பாடகர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளும் கவனிக்கப்படுகின்றன. தமிழில் இருந்து தேசிய விருதுகளை அதிகமுறை வாங்கிய பின்னணி பாடகர்களை குறித்து இங்கே காணலாம்.
கே.ஜே.யேசுதாஸ்
கே.ஜே.யேசுதாஸ் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எட்டு முறை பெற்றுள்ளார். தேசிய விருதுகளை அதிகம் பெற்ற பாடகர்களில் இவரும் ஒருவர். 1972 இல் அவர் தனது முதல் விருதைப் பெற்றார். ‘என் இனிய பொன் நிலாவே’, ‘ஆகாயம் மேல்’, ‘எந்த நெஞ்சில் நீங்காது’ ஆகியவை தமிழில் அவருடைய மிகவும் பிரபலமான சில பாடல்கள் ஆகும்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றுள்ளார். யேசுதாஸைத் தொடர்ந்து அதிக விருதுகளைப் பெற்ற பாடகர்களில் எஸ்பிபியும் ஒருவர். அவர் நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் 1979 இல் தனது முதல் விருதைப் பெற்றார். தமிழில் அவருடைய மிகவும் பிரபலமான பாடல்கள் ‘காதல் ரோஜாவே’, ‘மடை திறந்தது’, ‘ராக்கம்மா கையத்தட்டு’ என சொல்லிக்கொண்டே போகலாம்.
கே.எஸ்.சித்ரா
சித்ரா ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றுள்ளார். பெண்கள் பிரிவில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற பாடகி இவர்தான். 1985ல் ‘சிந்து பைரவி’ படத்தில் பாடிய பாடலுக்காக முதல் விருதைப் பெற்றார். ‘கண்ணாளனே’, ‘ஆனந்த குயிலின் பாட்டு’, ‘வீரபாண்டிய கோட்டையிலே’, ‘நான் போகிறேன்’ போன்றவை இவர் தமிழில் பாடிய பிரபலமான பாடல்களில் சில.
பி.சுஷீலா
பி சுசீலா தெற்கில் இருந்து பலமுறை விருதுவாங்கிய பாடகர்களில் ஒருவர் மற்றும் 1968 இல் தனது முதல் தேசிய விருதை வென்றார். பி சுசீலாவின் தமிழில் பிரபலமான சில பாடல்களாக 'கண்கள் எங்கே’, லவ் பேர்ட்ஸ்’, ‘சிட்டுக்குருவி’ ஆகியவற்றை சொல்லலாம்.
எஸ்.ஜானகி
எஸ் ஜானகி அல்லது ‘மெல்லிசை குயின்’ என அழைக்கப்படும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ படத்தில் அவர் பாடியதற்காக முதல் விருதைப் பெற்றார். எஸ் ஜானகியின் பிரபலமான பாடல்களில் சில ‘மச்சான பாத்திங்களா’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘சின்னத்தை அவள்’, ‘கண்மணி அன்போடு காதலன்.’ போன்றவை ஆகும்.