Watch Video: ”ஆனந்த யாழை மீட்டுகிறாய்” உன்னிகிருஷ்ணனும், அவரது மகளும்.. வைரலாகும் வீடியோ..!
பாடகர் உன்னிகிருஷ்ணன் தனது மகளுக்கு, முடி பின்னி விடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான பாடகர் உன்னி கிருஷ்ணன். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஏ. ஆர். ரஹ்மான் கொடுத்த வாய்ப்பால் இசைத்துறைக்குள் நுழைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இவருக்கு கலைமாமணி விருது, இசைச் செல்வம், சங்கீத கலாசாரதி , சங்கீத சக்கரவர்த்தி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
View this post on Instagram
இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு, கேரளாவை சேர்ந்த பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகனும், உத்ரா என்ற மகளும் உள்ளனர். இதில் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா ‘சைவம்’ படத்தில் ‘அழகே அழகே' பாடலை பாடினார். இந்தப்பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தெறி, லட்சுமி உள்ளிட்ட பல படங்களில்ம் பாடினார்.
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் உன்னிகிருஷ்ணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தனது மகள் உத்ராவை தனது மடியில் வைத்து அவருக்கு முடியை பின்னி விடுகிறார். இது மட்டுமல்லாது அந்த வீடியோவின் பின்னணியில் ஆனந்த யாழை பாடலை பாடி அதையும் அதனுடன் சேர்த்திருக்கிறார்.
View this post on Instagram
மேலும் அதில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ நாங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் முற்றிலும் வித்தியாசமானது. ஆனால் அதற்குள் பல ஆண்டுகளாக கடந்த வந்த கலாச்சாரமும் அடங்கியிருக்கிறது. அது தலைமுடி விஷயத்திற்கு வரும் போது, இது ஒன்று புதிதான விஷயம் ஒன்றுமில்லை. எனக்கு இது புதிய அனுபவம்.அதுவும் என்னுடைய மகளுக்கு இதை செய்யும் போது அது எனக்கு ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ” என்று பதிவிட்டுள்ளார்.