Singer Sunitha : கையில மாங்காயை வெச்சிட்டு போஸ் கொடுத்தா குத்தமா...? கொந்தளித்த பாடகி..
சமீபத்தில், அவர் ஒரு மாம்பழத்தை வைத்திருக்கும் ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்
தெலுங்குத் திரையுலகப் பாடகி சுனிதா தனது நீண்ட நாள் நண்பரான ராம் வீரபனேனியை கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், அவர் ஒரு மாம்பழத்தை வைத்திருக்கும் ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார், இதையடுத்து பாடகர் தனது கணவருடன் குழந்தையை எதிர்பார்க்கிறார் எனத் தகவல் வெளியானது. இதனால் எரிச்சலடைந்த சுனிதா அதற்கு இன்ஸ்டாகிராமிலேயே விளக்கம் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில், சுனிதா, “கடவுளே.. இந்த மக்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது... நான் இன்று எனது பண்ணையில் முதல் மாம்பழம் பழுத்ததைப் பற்றிய ஒரு படத்தை வெளியிட்டேன், இந்த செய்தி எப்படியெல்லாம் பரவுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதை அடுத்து பாடகர் மாம்பழத்தை வைத்திருக்கும் மற்றொரு ஸ்டில் ஒன்றையும் கீழே பதிவிட்டார். அவர் மேலும் கூறுகையில், "விஷயங்களை யூகித்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்...போதும்டா சாமி." எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
சுனிதாவுக்கு முதல் திருமணத்தில் ஸ்ரேயா கோபராஜூ என்ற மகளும், ஆகாஷ் கோபராஜு என்ற மகனும் உள்ளனர். அவரது இரு குழந்தைகளும் உயர்கல்வி முடித்து தொழில் வல்லுநர்களாக உள்ளனர்.
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில், அவர் ஒரு இயக்குநருடன் நேர்ந்த தர்மசங்கடமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "நான் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு சில வரிகளை டப்பிங் செய்வதற்காக டப்பிங் ஸ்டுடியோவிற்கு சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் படத்தின் இயக்குனர் "சுனிதா மேடம், நான் உங்கள் தீவிர ரசிகர். இன்று நீங்கள் இங்கே இருப்பதில் மகிழ்ச்சி மற்றும் நீங்கள் என் படத்திற்காக பணியாற்றுவதைப் பார்க்க நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என்றார். நான் சில வரிகளுக்கு டப்பிங் செய்த பிறகு, அந்த இயக்குநர் என்னை 'சுனிதா காரு' என்று அழைக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களில் அவர் என்னை 'சுனிதா' என்று அழைக்க ஆரம்பித்தார். பின்னர், நாங்கள் வேலையை முடித்த பிறகு, அவர் என்னை 'அரே, அம்மா, புஜ்ஜி, கண்ணா' என்று அழைத்தார். நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன்” எனப் பகிர்ந்துள்ளார்.