மேலும் அறிய

HBD Sujatha : நீ எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமே அதிசயமே... 90'ஸ் மெலடி குயின் சுஜாதா பிறந்தநாள்!  

90 களில் மெலடி குயினாக அசத்திய பின்னணி பாடகி சுஜாதாவின் 60வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை குவிந்து வருகிறார்கள்.

நெஞ்சோடு கலந்திடும் மெல்லிய குரலால் அனைவரையும் வசீகரிக்கும் பாடகி சுஜாதா மோகனின் 60வது பிறந்தநாள் இன்று. கேரளத்து பைங்கிளி என்றாலும் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மெய்மறக்க செய்து நிரந்தர இடத்தை பிடித்தவர்.  

HBD Sujatha : நீ எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமே அதிசயமே... 90'ஸ் மெலடி குயின் சுஜாதா பிறந்தநாள்!  

தனது 2 வயதில் தந்தையை இழந்த சுஜாதா, 7 வயதிலேயே மேடையில் பாட துவங்கிவிட்டார். கர்நாடக இசை மேதை மற்றும் பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து 2000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 1975ம் ஆண்டு வெளியான 'டூரிஸ்ட் பங்களா' என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண் எழுதி பொட்டு தொட்டு' என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகியாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். தமிழில் இளையராஜாவின் இசையில் 1977ம் ஆண்டு வெளியான 'கவிக்குயில்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் அந்த பாடல் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து இளையராஜாவின் இசையில்  ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'காயத்ரி' திரைப்படத்தில் இடம் பெற்ற  'காலை பனியில் ஆடும் மலர்கள்' பாடல் தான் சுஜாதாவின் குரலில் தமிழில் வெளியான முதல் பாடல் .

சினிமாவில் அன்று முதல் தொடங்கியது பின்னணி பாடகி சுஜாதாவின் பயணம். ரோஜா திரைப்படத்தில் 'புது வெள்ளை மலை', 'காதல் ரோஜாவே', புதிய முகம் படத்தில் 'நேற்று இல்லாத மாற்றம்', ஜென்டில்மேன் படத்தில் 'என் வீட்டு தோட்டத்தில்', ஜீன்ஸ் படத்தில் 'அதிசயம்', மின்சார கனவு படத்தில் 'பூ பூக்கும் ஓசை' பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் 'சுடிதார் அணிந்து வந்த', மின்சார கண்ணா படத்தில் 'உன் பேர் சொல்ல ஆசை தான்' என அவரின் ரம்மியமான மயக்கும் குரலில் வெளியான இந்த பாடல்களே அதற்கு சான்றாகும். 90 களில் மெலடி குயினாக அசத்தினார். ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடகியாக இருந்த சுஜாதா அவரின் இசையமைப்பில் தான் ஏராளமான தமிழ் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஜாதா பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன. இளையராஜா, தேவா, ராஜ்குமார், வித்யாசாகர், இமான் என ஏராளமான இசையமைப்பாளர்களின்  இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 

HBD Sujatha : நீ எங்களுக்கு கிடைத்த பொக்கிஷமே அதிசயமே... 90'ஸ் மெலடி குயின் சுஜாதா பிறந்தநாள்!  

பிலிம் கிரிட்டிக்ஸ், தமிழக அரசு மணிலா விருது, எக்ஸ்பிரஸ் விருது, கேரளா மாநில திரைப்பட விருது, ஏசியாநெட் திரைப்பட விருது, ஸ்வராலையா யேசுதாஸ் விருது என ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட சுஜாதா தற்போது பல இசை போட்டிகளில் நடுவராக இருந்து வளரும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த ஆசானாக இருந்து வருகிறார். 

1981ம் ஆண்டு மருத்துவர் கிருஷ்ணன் மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரின் ஒரே மகள் செல்ல மகள் தான் 'வா வாத்தி' புகழ் ஸ்வேதா மோகன். தாயை போலவே மகளும் பிரபலமான ஒரு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். சுஜாதாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Fake Teachers: பள்ளிகளில்‌ 10,000 போலி ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? பள்ளிக்‌ கல்வித்துறை பரபர பதில்!
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
Stock market crash:தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை- என்ன காரணம்?முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
தம்பி விஜய் மீதான பாசம் குறையவில்லை; ஆனால் அவர் இதை செய்ய வேண்டும்: சீமான் அந்தர் பல்டி
தம்பி விஜய் மீதான பாசம் குறையவில்லை; ஆனால் அவர் இதை செய்ய வேண்டும்: சீமான் அந்தர் பல்டி
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
TRUST Exam: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TRUST Exam: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget