Chinmayi : ராமன் ஒரு மோசமான புருஷன்..பாடகி சின்மயி கருத்திற்கு இந்துத்துவ அமைப்புகள் கண்டனம்
ராமாயணத்தைப் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக பின்னணி பாடகி சின்மயி இந்துத்துவ அமைப்புகளால் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறார்
ராமாயணம் பற்றி சின்மயி
பின்னணி பாடகி சின்மயி யின் பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சின்மயி தனது எக்ஸ் தளத்தில் ராமாயணத்தைப் பற்றி இப்படி கூறியுள்ளார் " ஶ்ரீ ராமராஜ்ஜிய தொடருக்கு இப்போது தான் தமிழ் டப்பிங் செய்து முடித்தேன். சீதாவுக்கு என்ன ஒரு துரதிஷ்டவசமான வாழ்க்கை. தர்மம் என்கிற பெயரில் ராமன் எவ்வளவு ஒரு மோசமான கணவராக இருந்திருக்கிறார். ஒரு மோசமான கணவனுக்கு சிறந்த உதாராணம் என்றால் அது ராமன் அல்லது லட்சுமணனாக தான் இருக்கமுடியும்.' இந்த பதிவு தற்போது இந்துத்துவ கும்பலின் கைகளில் சிக்கியுள்ளது. பதிலுக்கு அவர்கள் சின்மயியை சமூக வலைதளங்களில் தாக்கி வருகிறார்கள்.
சின்மயி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்
சின்மயியின் கருத்தை விமர்சிப்பது மட்டுமில்லாமல் தற்போது அவர் குறித்த தவறான வதந்தி ஒன்றும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது சின்மயி உண்மையில் ஒரு இஸ்லாமியர் என்றும் அவரது நிஜப்பெயர் ஃபாதிமா என்றும் அவர் பற்றிய வதந்திகள் இந்துத்துவ அமைப்புகள் சமூக வலைதளத்தில் திட்டமிட்டு பரப்பிவருகிறார்கள்.
Presenting the Flag bearer Male of Sanatana Dharma - A man who will use choicest abuse and slurs that involve fornicating sisters and mothers.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 30, 2024
Mee culture, mee manchi Sanatana practice and discipline ababbabababbaba. Awesome. Keep it up. pic.twitter.com/kcLxHcH3Fr
சமீபத்தில் நடிகை சாய் பல்லவி இந்திய ராணுவம் பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக இந்துத்துவ அமைப்புகள் அவரை கடுமையாக தாக்கினர். சமூக வலைதளத்தில் சாய் பல்லவிய புறக்கணிப்போம் என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்டானது. சாய் பல்லவியைத் தொடர்ந்து தற்போது சின்மயி பற்றியும் பல்வேறு அவதூறுகள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.