Vendhu Thanindhathu Kaadu 2nd Look: லுங்கி, பனியன் சிம்பு.. வெளியானது 'வெந்து தணிந்தது காடு' புதிய போஸ்டர்!
செகண்ட் லுக் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. நிச்சயம் இப்படத்தில் சிம்பு வித்தியாசமாக இருப்பார் என நம்புவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![Vendhu Thanindhathu Kaadu 2nd Look: லுங்கி, பனியன் சிம்பு.. வெளியானது 'வெந்து தணிந்தது காடு' புதிய போஸ்டர்! Simbu Vendhu Thanindhathu Kaadu second look poster released Vendhu Thanindhathu Kaadu 2nd Look: லுங்கி, பனியன் சிம்பு.. வெளியானது 'வெந்து தணிந்தது காடு' புதிய போஸ்டர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/b4ad93c39911b5f070de66aad55d451e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கெளதம் மேனன் - சிம்பு இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது. ஒரு சிறிய அறைக்குள் ஒரு இளைஞர் பட்டாளம் அமர்ந்தும், படுத்தும் இருக்க, லுங்கி பனியனுடன் சிம்பு அமர்ந்திருக்கிறார். இந்த செகண்ட் லுக் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. நிச்சயம் இப்படத்தில் சிம்பு வித்தியாசமாக இருப்பார் என நம்புவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாநாடு படத்தை முடித்து கொடுத்த கையோடு சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். குறிப்பாக சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானதும் , அந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். சிம்புவின் 47 வது படமான உருவாக உள்ள இந்த புதிய படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஏற்கெனவே வெளியாகனது. STR , GVM கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு ’என பெயர் வைக்கப்பட்டது. முதல் போஸ்டர் இணையத்தை கலக்கியது. அதில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தார்.
முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் எந்த காலத்திற்கும் ஃபிரஷ் ஃபீலை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது உருவாக உள்ள 'வெந்து தணிந்தது காடு ‘படம் இந்த STR , GVM கூட்டணியின் மூன்றாவது படம் . இவர்களில் முந்தைய படங்களுக்கு இசையமைத்த எ.ஆர்.ரஹ்மானே வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படம் மட்டுமின்றி, சிம்பு தற்போது கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
#VendhuThanindhathuKaadu #VTK #STR #SilambarasanTR pic.twitter.com/8pHxvVIKPj
— Silambarasan TR (@SilambarasanTR_) August 27, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)