Simbu Golden Visa: சிலம்பரசனுக்கு கோல்டன் விசா கெளரவம்.. கூப்பிட்டுக்கொடுத்த துபாய் அரசு..!
துபாய் அரசு நடிகர் சிலம்பரசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்துள்ளது.
துபாய் அரசு நடிகர் சிலம்பரசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவித்துள்ளது.
View this post on Instagram
சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர் நடிகைகளை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி , பார்த்திபன் , த்ரிஷா , மம்முட்டி , மோகன் லால், துல்கர் சல்மான் ,உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இதன் மூலம் துபாய் அரசு தங்கள் நாடுகளின் சுற்றுலா மேம்பாட்டை பெருக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கலை , மற்றும் பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் துபாயில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பை வேண்டுகிறது அந்நாட்டு அரசு . கலை சேவைகளை நடிகர்கள் வழங்குவது, துபாய் சுற்றுலா தளங்கள் குறித்தான பதிவுகளை ஷேர் செய்வதன் மூலம் தங்கள் நாட்டின் புகழ் சாமானியர்களை சென்றடையும் என துபாய் அரசு நம்புகிறது.
கோல்டன் விசாவை யார் பெறலாம் :
கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசால் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், கலை, அறிவியல், விளையாட்டுத் துறையில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுகிறது. இந்த துறையில் திறமையானவர்கள் யாராக இருந்தாலும் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்