திருமணத்தில் மணமகள் கியாரா காலைத் தொட்டு கும்பிட்ட சித்தார்த் மல்ஹோத்ரா... வியக்கும் பாலிவுட் வட்டாரம்!
தங்கள் காதல் பற்றி மீடியாக்களிடம் எங்கேயும் மூச்சு விட்டு உறுதி செய்யாமல், சத்தமில்லாமல் வெற்றிகரமாக திருமணத்தை முடித்துள்ளது இந்த ஜோடி.
பாலிவுட்டில் இந்த ஆண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளும் ஜோடி கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா.
தங்கள் காதல் பற்றி மீடியாக்களிடம் எங்கேயும் மூச்சு விட்டு உறுதி செய்யாமல், வெற்றிகரமாக திருமணத்தை முடித்துள்ளது இந்த ஜோடி.
இவர்களது கனவுத் திருமணம் ராஜஸ்தான், ஜெய்சால்மரில் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், அன்று இரவே புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருவரும் ஒட்டுமொத்த சோஷியல் மீடியா சென்சேஷனாக மாறி லைக்ஸ் அள்ளிக் குவித்தனர்.
நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இத்திருமணம் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் இந்தத் தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் திருமணம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகி இணையத்தை ஆட்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் திருமண பாரம்பரிய சடங்குகள் மேற்கொண்டிருந்தபோது மணப்பெண் கியாராவை நிற்க சொல்லிவிட்டு மணமகன் சித்தார்த் மல்ஹோத்ரா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமான பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் வகையிலும், கியாராவின் மீதான தன் அளவில்லாத காதலை காண்பிக்கும் வகையிலும் சித்தார்த் கியாராவில் காலில் விழுந்து வணங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், ஷாஹித் கபூர் அவரது மனைவி மிரா கபூர், நடிகை ஜூஹி சால்வா ஆகியோர் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இவர்கள் ஜெய்சால்மர் விமான நிலையத்தில் திருமணத்துக்குப் பின் ஒன்றாகத் திரும்பிய புகைப்படங்களும் இணையத்தில் ஹிட் அடித்தன.
இன்று டெல்லியிலும், நாளை மும்பையிலும் என 2 திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை சித் - கியாரா ஜோடி நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.