மேலும் அறிய

Shruti Haasan: மதுவுக்கு அடிமையாகி இருந்தேன்.. ஸ்ருதி ஹாசன் ஸ்டேட்மெண்ட்டால் அதிர்ச்சி!

Shruti Haasan: “என் வாழ்வில் 8 ஆண்டுகள் மதுவுக்காக செலவழித்தேன். மதுவுக்கு அடிமையாகி இருந்தேன். அப்போது பார்ட்டிகளில் நான் நிதானமாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்"

Shruti Haasan: 8 ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் பாடகியாக திரைக்கு வந்த ஸ்ருதிஹாசன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன், தனுஷ் நடித்த 3 படத்திலும், சூர்யாவின் சிங்கம், விஷால் நடித்த பூஜை என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். 
 
கடைசியாக தெலுங்கில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்திலும் நடித்துள்ளார். அதில் பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள நிலையில், வரும் 22ம் தேதி பான் இந்தியா படமாக இப்படம் திரைக்கு வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் ‘தி ஐ’ என்ற படத்திலும் ஸ்ருதி தற்போது நடித்து வருகிறார். 
 
நடிப்பு மட்டுமில்லாமல் இசை, பாடல், நடனம் என ஆல்ரவுண்டராக வலம் வரும் ஸ்ருதிஹாசன் நேர்க்காணல் ஒன்றில் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “என் வாழ்வில் 8 ஆண்டுகள் மதுவுக்காக செலவழித்தேன். மதுவுக்கு அடிமையாகி இருந்தேன். அப்போது பார்ட்டிகளில் நான் நிதானமாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஃபிரண்ட்ஸுடன் குடிப்பதை நான் விரும்பினேன். ஆனால், போதைப்பொருளை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாட்கள் மதுவுக்காகவே இருந்தன. 
 
பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். அந்த காலம் பற்றி இப்போது நான் வருத்தப்படவில்லை. அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதி. என்னை போல் பலரும் மதுவில் இருந்து மீண்டும் வந்துள்ளனர்” என பேசி அதிர்ச்சி அளித்துள்ளார். பிரபலமான நடிகையான ஸ்ருதிஹாசன் 8 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என பேசி இருப்பது அரவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 
சாந்தனு ஹசாரிகாவுடன் காதலில் இருக்கும் ஸ்ருதிஹாசன் சமீப காலமாக அவர் உடன் தான் இணைந்திருக்கும் படங்களைப் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2: இங்க நான்தான் கிங்..
Jailer 2: இங்க நான்தான் கிங்..". ஓடிடி-யிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்!
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
Embed widget