மேலும் அறிய
Ayalaan Second Single: 2 ஆண்டுகள் கழித்து அயலான் இரண்டாவது சிங்கிள்.. அப்டேட் கொடுத்த இசைப்புயல்!
Ayalaan Second Single: அயலான் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

அயலான் இரண்டாவது சிங்கிள்
Ayalaan Second Single: சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளார். இந்த நிலையில் ரவிக்குமார் இயக்கி இருக்கும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதும், பட்ஜெட் பிரச்னை மற்றும் கொரோனா பரவலால் அயலான் படப்பிடிப்பு தள்ளிப்போனது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடந்த நிலையில் அயலான் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது ரிலீஸூக்குத் தயாராகியுள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியனை மையப்படுத்தி உருவான அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் சிங்கிள் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் பாடிய ‘வேற லெவல் சகோ’ என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 20ஆம் தேதியான புதன்கிழமை வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
I had an intruder while recording my next song! 👽😃#AyalaaAyalaa - second single from #Ayalaan releasing on Wednesday, 20th of December.
— A.R.Rahman (@arrahman) December 18, 2023
Are you ready?#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @Ravikumar_Dir… pic.twitter.com/K7HmqE8XfH
இதற்கிடையே, அயலான் படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டும் வெளியாகி இருந்தது. வரும் 26ஆம் தேதி அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும், அதுவும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அயலான் படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஏலியனாக வரும் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் பின்னணி குரல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jyothika: கல்யாணத்துக்கு அப்பறம் மாமனார் நடிக்கக்கூடாதுனு சொன்னாரா..? ஜோதிகா பளிச் பதில்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement