Lal Salaam First Single: ஏரி, குளம் நிறைஞ்சிட போடுங்க குலவை.. ‘லால் சலாம்’ முதல் பாடல் க்ளிம்ஸ் வெளியீடு!
Lal Salaam First Single: பாடகர் சங்கர் மகாதேவன், பாடகிகள் ஏ.ஆர்.ரைஹானா மற்றும் தீப்தி சங்கர் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் முதல் பாடலின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் - விக்ராந்த் என நிஜ வாழ்விலும் கிரிக்கெட்டில் தேர்ந்த இரண்டு நடிகர்களைக் கொண்டு, கிரிக்கெட்டை மையப்படுத்தி ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர 80ஸ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகள் நிரோஷா, ஜீவிதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில் எனப் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..
சென்ற தீபாவளிக்கு லால் சலாம் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பினைப் பெற்றது.
இந்த வரிசையில் இப்படத்தின் ‘தேர் திருவிழா’ எனும் முதல் சிங்கிள் இன்று வெளியாக உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு இந்தப் பாடல் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
பாடகர் சங்கர் மகாதேவன், பாடகிகள் ஏ.ஆர்.ரைஹானா மற்றும் தீப்தி சங்கர் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். யோகி சங்கர் இப்பாடலை எழுதியுள்ளார். திருவிழா மோடில் ஊரைக் குறிப்பிடும் வகையில் இப்பாடல் வரிகள் அமைந்துள்ள நிலையில், இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
முன்னதாக ரஜினிகாந்த் க்ளிம்ஸ் வீடியோவில் இடம்பெற்ற ஜலாலி பிஜிஎம் வரவேற்பைப் பெற்றது. மேலும் சிறு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்துக்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது ரசிகர்கள் எதிர்பார்ப்பினை எகிறச் செய்துள்ளது.
Here's a glimpse into the 'THER THIRUVIZHA' before the festival begins! ☀️🌾✨ Full song releasing at 5PM today!
— Lyca Productions (@LycaProductions) December 18, 2023
An @arrahman musical 🎶
Singers 🎤 @Shankar_Live @RaihanahShekar @deepthisings @iamyogi_se
Lyrics ✍️ @Lyricist_Vivek
Audio on @SonyMusicSouth 📼#LalSalaam 🫡… pic.twitter.com/Lp7fQEViNQ
திருவண்ணாமலையில் தொடங்கி, மும்பை, பாண்டிச்சேரி என முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
மதத்தை வைத்து கிரிக்கெட்டில் செய்யப்படும் அரசியல், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Singer Chitra: இதயத்தை துளைத்து சென்றுவிட்டாய்.. மறைந்த மகள் பிறந்தநாளில் பாடகி சித்ரா கண்ணீர் பதிவு!
Jyothika: கல்யாணத்துக்கு அப்பறம் மாமனார் நடிக்கக்கூடாதுனு சொன்னாரா..? ஜோதிகா பளிச் பதில்..