ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடிய ஷாரூக்கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடினார்.

பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் மெய்நிகரில் கலந்துரையாடினர். ஷாருக்கானின்  மீர்ஃபவுண்டேஷன் இந்த மெய்நிகர் சந்திப்பை ஏற்பாடு செய்தது.

இந்த சந்திப்பின் போது ஷாருக்கான் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கொரோனா காலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறித்தினார். மற்றவர்களின் அறிவுரைகளையும் கேட்டறிந்தார். உரையாடலின் போது தனது குழந்தைக்கு ஒரு நல்ல பெயரைத் தேர்வுசெய்ய உதவுமாறு ஷாருக்கானுக்கு பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். கட்டாயம் உதவுகிறேன் என்று அவரும் உறுதியளித்தார்.ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடிய ஷாரூக்கான்

உடனே மற்றொரு பெண், " இனி அனைவரும் பெயர் வைக்க வேண்டும் என்று வரிசையில் நிற்பார்கள்"என்று கிண்டல் அடித்தார். இதற்கு  நகைச்சுவையாக பதிலளித்த ஷாருக், “எனக்கு தற்போது வேலை இல்லை. குறைந்தபட்சம் இந்த  வேலையாவது கிடைக்கும் ” என்று கூறினார்.

2018ல் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'ஜீரோ'   திரைப்படம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது.  இத்திரைப்படம் தனது திரை வாழ்க்கையில் நடந்த பேரிழப்பு என்று ஷாருக்கான் வெளிப்படையாகவே ஊடகங்களிடம் தெரிவித்தார். ஷாருக்கானின் 'பதான்' இந்தி படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.  

Tags: Bollywood sharuk khan acid conversation video call

தொடர்புடைய செய்திகள்

சைஸ் கேட்ட நபருக்கு, பார்வதி நாயரின் அதிரடி பதில் : லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

சைஸ் கேட்ட நபருக்கு, பார்வதி நாயரின் அதிரடி பதில் : லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!

‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!

Netrikann | ரெடியா இருங்க பாசு.... நாளை காலை வருகிறார் நயன்தாரா!

Netrikann | ரெடியா இருங்க பாசு.... நாளை காலை வருகிறார் நயன்தாரா!

20 Years Of Citizen: அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக்கிய ‛சிட்டிசன்’ ; விமர்சனங்களை உடைத்தெறிந்த சுப்பிரமணி!

20 Years Of Citizen: அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக்கிய ‛சிட்டிசன்’ ; விமர்சனங்களை உடைத்தெறிந்த சுப்பிரமணி!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி சென்னை வந்தது

Tamil Nadu Corona LIVE: ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி சென்னை வந்தது

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!