மேலும் அறிய

Yatra 2: ஜெகன் மோகன் பயோபிக் ரிலீஸ்... தியேட்டரில் YSR காங்கிரஸ் உடன் பிற கட்சியினர் மோதல்!

ஆந்திர பிரதேசத்தில்  ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்  கட்சி உள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில முதலமைச்சராக உள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா 2 ரிலீசாகியுள்ள நிலையில் தியேட்டரில் தொண்டர்களிடையே அடிதடி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர பிரதேசத்தில்  ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்  கட்சி உள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில முதலமைச்சராக உள்ளார். இதனிடையே வரும் மே மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதனுடன் ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. 

இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் இப்பவே தேர்தல் திருவிழாவின் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா கட்சி என பலமுனை போட்டிகள் அம்மாநிலத்தில் நிலவுகிறது. இப்படியான நிலையில் அங்கு “யாத்ரா 2” என்ற படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறப்புக்குப் பின் ஜெகன்மோகன் ரெட்டியின் எழுச்சி, யாத்திரை, அவரின் வெற்றி என படம் முழுக்க உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக “யாத்ரா” என்ற படம் அமைந்தது. இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியானது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படியான நிலையில் யாத்ரா 2 படத்தில் ஜெகன் மோகன் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதேசமயம் இந்த ட்ரெய்லரில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பிற கட்சிகளை பற்றியும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று படம் வெளியான நிலையில் அதில் காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட பிற கட்சிகளை விமர்சித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் அக்கட்சியின் தொண்டர்கள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் கைக்கலப்பாக மாறிய நிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் தியேட்டரில் நடைபெற்ற மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
Embed widget