Watch Shooting Spot Video | வலிக்கலையே மொமண்ட்.. அதுல்யாவிடம் சரமாரியாக குத்து வாங்கியும் கூலாக சிரிக்கும் சாந்தனு..
படம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , முருங்கைகாய் சிப்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் ஷாந்தனு.
முந்தான முடிச்சு திரைப்படம் என்றாலே நினைவுக்கு வருவது முருங்கைக்காய்தான். அந்த அளவுக்கு முருங்கைக்காயை வைத்து ஊர்வசியுடன் காமெடி செய்திருப்பார் பாக்கியராஜ். இன்றளவும் அந்த காமெடி பிரபலம் இந்த நிலையில் அப்பாவின் அந்த காமெடியில் இடம்பெறும் முருங்கைகாயை படத்தின் தலைப்பாக கொண்டு நடித்துள்ளார் ஷாந்தனு பாகியராஜ். முருங்கைகாய் சிப்ஸ் என பெயர் கொண்ட அந்த படத்தில் பாக்கியராஜும், ஊர்வசியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுள்ளனர். படத்தில் ஷாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். காமெடியன்களாக களமிரங்குகின்றனர் யோகிபாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும். இந்த நிலையில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை ஸ்ரீதர் இயக்க ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். தரன் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
View this post on Instagram
படம் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , முருங்கைகாய் சிப்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சாந்தனு. அந்த வீடியோவில் ஹீரோயின் அதுல்யா ரவி, சாந்தனுவை சரமாரியாக குத்துகிறார். அது வலிக்காத மாதிரியே சாந்தனு நடிக்க, இடையிடையே வடிவேலுவின் காமெடியுடன் எடிட் செய்துள்ளார் சாந்தனு . அந்த வீடியோ தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
View this post on Instagram
படம் வெளியாவதை முன்னிட்டு , படத்தின் sneak peak வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக படத்தில் தனது தந்தையுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த சாந்தனு, அவர் நிறைய விஷயங்களை தனக்கு சொல்லிக்கொடுத்ததாகவும் , கண்ட்டினியூவிட்டியில் அதிக கவனம் செலுத்துவார் எனவும் கூறியிருந்தார்.
View this post on Instagram