Shamlee Shalini: குட்டி அஞ்சலியாக நடித்தவர்.. இன்று எவ்வளவு பெரிய கலைஞராக மாறிவிட்டார்.. ஷாலினியின் தங்கை ஷாம்லியின் ஓவியக் கண்காட்சி
அஞ்சலி படத்தில் குட்டிக் குழந்தையாக அறிமுகமான ஷாம்லி இன்று ஒரு ஓவியராக இருக்கும் ஷாம்லி.
![Shamlee Shalini: குட்டி அஞ்சலியாக நடித்தவர்.. இன்று எவ்வளவு பெரிய கலைஞராக மாறிவிட்டார்.. ஷாலினியின் தங்கை ஷாம்லியின் ஓவியக் கண்காட்சி Shamlee Shalini Meets art Director Thotta Tharani Shared Pics on Instagram Shamlee Shalini: குட்டி அஞ்சலியாக நடித்தவர்.. இன்று எவ்வளவு பெரிய கலைஞராக மாறிவிட்டார்.. ஷாலினியின் தங்கை ஷாம்லியின் ஓவியக் கண்காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/3b69e91761c262ff189c0614d7a356311687871325155572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுட்டிக் குழந்தையாக இருந்த காலம் தொட்டே திரையுலகில் பலர் மனதை தனதாக்கிக் கொண்டவர் ஷாம்லி. பேபி ஷாம்லி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும், நடிகர் ஷாலினியின் தங்கை.
இயக்குநர் மனிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தார் ஷாம்லி. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார் ஷாம்லி. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழித் திரைப்படங்களில் நடித்து வந்த ஷாமிலி சினிமா மட்டும் இல்லாமல் ஒரு நவீன ஓவியரும் கூட. அண்மையில் தனது ஓவியங்களை தொகுத்து பார்வையிடும் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தார் ஷாம்லி .இந்த நிகழ்ச்சிக்கு இந்திய சினிமாவின் பல்வேறு பிரபலங்கள் வருகை தந்தனர். புகழ்பெற்ற கலை இயக்குநரான தோட்டா தரணி தனது ஓவியங்களை பார்வையிட வந்த தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் ஷாம்லி.
View this post on Instagram
தோட்டா தரணியுடன்தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்த ஷாம்லி “ உங்களது அறிவையும் மேதமையையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி “ எனப் பதிவிட்டுள்ளார்.
ஷாம்லியின் அக்காவான நடிகை ஷாலினி அவருடன் நிகழ்ச்சி முழுவதும் காணப்பட்டார்.
View this post on Instagram
மேலும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இயக்குநர் மனிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினியும் வருகை தந்தனர்.
View this post on Instagram
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)