Leo Box Office : பாக்ஸ் ஆபீஸ் வரலாறை மாற்றி எழுதும் லியோ... தயாரிப்பு நிறுவனம் சொல்ல வருவது என்ன ?
லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் இன்றுடன் நான்காவது நாளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய், த்ரிஷா, அனுராக் கஷ்யப், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது இந்தப் படம். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
லியோ விமரசனங்கள்
லியோ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை திருப்திபடுத்த தவறியிருக்கிறது. அதே நேரத்தில் படத்தின் வசூல் குறித்தும் பல்வேறு கேள்விகள் முனவைக்கப் படுகின்றன. கடைசி நேரத்தில் திட்டமிடப் பட்டதை விட குறைவான திரையரங்குகளில் வெளியானத் திரைப்படம் எப்படி இவ்வளவு வசூல் எடுக்க முடியும் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லியோ முதல் நாள் வசூல்
லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் 148 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழ் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டதைத் தொடந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. மேலும் படம் குறித்தான விமர்சனங்களால் இரண்டாவது நாளில் லியோ படத்தின் வசூல் கனிசமான அளவு குறைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப் படுகிறது.
Hello records..
— Seven Screen Studio (@7screenstudio) October 20, 2023
He broke you down 🔥
You couldn’t last a day 😎#Leo first day worldwide gross collection is 148.5 crores+ 💥
HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM 🤜🤛#BlockbusterLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/ssC1Vk5RIx
படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்
This is how he's gonna play 🔥
— Seven Screen Studio (@7screenstudio) October 22, 2023
Indha singatha seendathapaa 😎
Varalaru motham b̶l̶o̶o̶d̶ rewrite aagirchu ma 💥#LeoIndustryHit 💣#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @PharsFilm… pic.twitter.com/5kmyI9HVdf
இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவலை வெளியிடும் என்று அனைவரும் ஆர்வமாக எதிர்பார்க்க லியோ படத்தை பாராட்டி மட்டுமே இந்த போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் வசூல் குறித்த எந்த தகவலும் இதில் குறிப்பிடப் படவில்லை. இந்த போஸ்டரின் லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றி எழுதுவதாக பயங்கரமாக பில்டப் கொடுத்துள்ளது. லியோ படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல்களை முதல் வார முடிவில் மொத்தமாக படக்குழு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.