siddhu | shreya | மனைவியின் பிறந்த நாளுக்கு சித்தார்த் கொடுத்த காஸ்ட்லி கார்: - வைரலாகும் வீடியோ!
பலரின் ஃபேவரைட் ஜோடியாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா மீண்டும் இணைய வைரலில் இடம்பிடித்துள்ளனர்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் சித்து மற்று ஸ்ரேயா. இருவருக்கும் சின்ன திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா.மேலும், இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.சமீபத்தில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பலரின் ஃபேவரைட் ஜோடியாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா மீண்டும் இணைய வைரலில் இடம்பிடித்துள்ளனர். சின்னத்திரை நடிகையான ஸ்ரேயா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் தற்போது தனது காதல் மனைவிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார் சித்தார்த்.
View this post on Instagram
பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருக்கு Mg காரினை தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார் சித்தார்த். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காரின் விலை 10 முதல் 15 லட்சம் வரையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
View this post on Instagram