Oorvambu Lakshmi | ”அதனாலதான் எடை குறைப்பு சர்ஜரி பண்ணிக்கிட்டேன்.. இப்போ வாழ்க்கை இதுதான்..” : ஊர்வம்பு லக்ஷ்மி பகிர்ந்த அனுபவங்கள்..
வெயிட் லாஸ் சர்ஜரியின் வேதனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளார் நடிகை லக்ஷ்மி.
வெயிட் லாஸ் சர்ஜரியின் வேதனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளார் நடிகை லக்ஷ்மி.
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் வில்லி வனஜா ரோலில் நடித்து வருபவர் லக்ஷ்மி. பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் லட்சுமி எப்போதும் இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சீரியலில் வில்லியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஜாலியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். யூடியூப் சேனலிலும் அவர் ஆக்டிவ் தான்.
அவர் வெயிட்லாஸ் செய்த கதையைப் பகிர்ந்துள்ளார். பேரியாட்ரிக் சர்ஜரியை அவர் செய்துள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் உடல் எடை குறைப்புக்காக டயட், ஜிம், வாக்கிங், யோகா என பலவற்றையும் முயன்றேன். எதுவும் எனக்கு சரியாக செட் ஆகவில்லை என்ற நிலையில்தான் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டேன். எனக்கு சிறுவயதில் இருந்தே ஊசி போடக்கூட பயம். ஆனால், எனக்கு எண்டோஸ்கோபி செய்தார்கள். அப்போது கூட அறுவை சிகிச்சையை விட்டுவிடுவோம் என நினைத்தேன். ஆனால் எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அதைச் செய்தேன். அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியான அன்றே சரியான பயம் தொற்றிக் கொண்டது. அப்புறம் மனநல மருத்துவர்கள் அதற்கான மாத்திரை கொடுத்தனர். 3-வது நாள் அறுவை சிகிச்சை நடந்தது. அப்புறம் பார்த்தால் என் மூக்கு, வாய் என பல இடங்களில் ட்யூப். சிறுநீர் வெளியேற்ற ட்யூப். நினைவு தெரிந்து இது மாதிரியாக நடந்ததே இல்லை. சிறு வயதிலிருந்தே ஹெல்த்தியாக இருப்பேன். முதன்முதலாக என்னை நானே அப்படிப் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அதற்குப் பின்னர் எனக்கு நேர்ந்த மாற்றம் தான் மிகவும் முக்கியமானது. நன்றாகப் பசிக்கும். ஆனால், இரண்டு ஸ்பூன் சாப்பிட்டாலே பசி அடங்கிவிடும். வயிறு சுருங்கிவிட்டது. சப்போட்டா பழம் கூட முழுதாக சாப்பிட முடியாது. பாதி இட்லிதான் சாப்பிட முடியும். இரண்டு ஸ்பூன் பிரியாணிதான் சாப்பிட முடியும். சாப்பாடே இல்லை என்றளவில்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
இனிமேல் நான் நார்மலாக சாப்பிட முடியுமா என்பது சிரமம்தான். ஆகையால் என்னுடைய் வெயிட் லாஸ் சர்ஜரி பயணம் இப்படித்தான் இருந்தது.
எல்லா பலன்களையும் பெறுவதற்கு முன்னாடி ஒரு முயற்சியும், அதில் சில வேதனைகளும் இருக்கும். அதையும் சேர்த்தது தான் வாழ்க்கை. நான் எனக்கு என்ன வேண்டும் என்று தீர்மானித்து இந்தப் பயணத்தை ஏற்றுக் கொண்டேன். நீங்கள் அதேபோல் தீர்மானித்து செயல்படுங்கள்.
இது போன்ற அறுவை சிகிச்சைக்கு முன்னர் இயல்பாக உடல் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அது முடியாவிட்டால் மட்டுமே இது மாதிரியான அறுவை சிகிச்சைக்கு வாருங்கள். இந்த அறுவை சிகிச்சையும் ஆரோக்கியமானதுதான். ஆனால் நீங்கள் இதுபோன்ற சில சகிப்புத்தன்மைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்” இவ்வாறு லக்ஷ்மி கூறியுள்ளார்.