மேலும் அறிய

Pudhupettai2: புதுப்பேட்டை 2 படத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறாரா? மீண்டும் இணையும் விவாகரத்து தம்பதிகள்?

Pudhupettai 2: சினிமா கேரியரில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை யாரையும் சார்ந்து இருக்காமல் பணியாற்ற செல்வராகவன் தான் காரணம் என்ற சோனியா அகர்வால்.

Pudhupettai 2: செல்வராகவன் அழைத்தால் புதுப்பேட்டை 2 படத்தில் நடிப்பேன் என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். 

புதுப்பேட்டை:

தனுஷ் அண்ணன் செல்வராகவன் தயாரிப்பில் 2006ம் ஆண்டு திரைக்கு வந்த படம் புதுப்பேட்டை. வன்முறை, பழிக்குப்பழி, ரவுடித்தனம், குரூரம் உள்ளிட்டவற்றை பேசும் ரவுடியிச அரசியல் படமாக புதுப்பேட்டை பார்க்கப்பட்டது. உணர்வுப்பூர்வமான படைப்புகளை கொடுக்கும் செல்வராகவன், புதுப்பேட்டையில் தனுஷை நடிக்க வைத்து அவருக்கு எவர்கிரீன் படமாக மாற்றினார். 
 
படத்தின் காட்சி அமைப்புகள், திரைக்கதை, பாடல்கள், பிஜிஎம் உள்ளிட்டவை இன்றும் புதுப்பேட்டை படம் குறித்து பேச வைக்கிறது. படம் ரிலீசாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் அது குறித்து செல்வராகவன் பேசியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பகிர்ந்த தகவலில், புதுப்பேட்டை 2 இந்த ஆண்டில் வரப்போகிறது என கூறியுள்ளார். 
 
இதனால் புதுப்பேட்டை படம் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் புதுப்பேட்டை 2 படம் குறித்து முதல் பாகத்தில் நடித்த சோனியா அகர்வால் பேசியுள்ளார். அதில், “ புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வாவுடன் வேலை பார்ப்பதில் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால், படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை” என கூறியுள்ளார். 
 
மேலும், தனது சினிமா கெரியரில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை யாரையும் சார்ந்து இருக்காமல் பணியாற்ற செல்வராகவன் தான் காரணம் என்றும், அவர் தன்னுடைய குரு என்றும், தனுஷுடன் நடிக்க கற்றுக் கொண்டதாகவும் நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். 

தம்பதி:

தனுஷை வைத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை எடுத்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி மற்றும் புதுப்பேட்டை படங்களில் நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலித்ததுடன், 2006ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
 
ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளே நீடித்த நிலையில், 2012ம் ஆண்டு செல்வ ராகவனிடம் இருந்து சோனியா அகர்வால் விவாகத்து பெற்றார். அதன்பின்னர், தன்னுடன் உதவி இயக்குநராக வேலை பார்த்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்த செல்வராகவனுக்கு 3 குழந்தைகள் உள்ளன. எனினும், செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget