மேலும் அறிய

Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?

Aadi Krithigai 2026 Date And Time: முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாள் எப்போது? பக்தர்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு பண்டிகையும் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை ஆகும். அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக ஆடிக்கிருத்திகை திகழ்கிறது. 

ஆடிக்கிருத்திகை:

ஆடி மாதத்தில் வரும் பண்டிகையில் மிகவும் முக்கியமான விசேஷ நாளாக ஆடிக்கிருத்திகை பண்டிகை உள்ளது.  ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்றாலும், ஆடிக்கிருத்திகை பண்டிகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் ஆகும்.

ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா?

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமே ஆடிக்கிருத்திகை ஆகும். நடப்பாண்டிற்கான கிருத்திகை நட்சத்திரம் நாளை மாலை 6.18 மணிக்குத் தொடங்கி, கிருத்திகை நட்சத்திரம் நாளை மறுநாளான 7ம் தேதி 4.51 மணிக்கு நிறைவடைகிறது.

கிருத்திகை நட்சத்திரம் நாளை மாலை தொடங்குவதில் சில கோயில்களில் நாளையே ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் நாளை மறுநாளான 7ம் தேதி ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, ஒருநாளின் சூரிய உதயத்தின்போது என்ன நட்சத்திரம் இருக்கிறதோ? அதுவே அந்த நாள் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். அந்த கணக்கீட்டின்படி நாளை மறுநாள் சூரிய உதயத்தின்போதுதான் கிருத்திகை நட்சத்திரம் இருக்கும்.

கிருத்திகை விரதம் எப்போது?

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து மனமுருகி வேண்டிக்கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கிருத்திகை விரதம் பொதுவாக பரணி, கிருத்திகை இரண்டு நட்சத்திரங்களும் சேரும் நாளிலே விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.

இதன்படி பார்த்தால் நாளை சில பக்தர்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். நாளை மறுநாள் சில பக்தர்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். திருத்தணி உள்ளிட்ட பெரும்பாலான முருகன் கோயில்களில் நாளை ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. சில முருகன் கோயில்களில் நாளை மறுநாள் ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது. 

களைகட்டும் முருகன் கோயில்கள்:

பொதுவாக முருகன் கோயில் எப்போதும் களை கட்டி காணப்படும். ஆடிக்கிருத்திகை என்றால் முருகன் கோயில்களில் பக்தர்கள் பன்மடங்கு அதிகளவு வருவார்கள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை மற்றும் பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

நாளை வியாழன் மற்றும் நாளை மறுநாளான வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களும் முருகப்பெருமான் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. முருகன் கோயில்கள் மட்டுமின்றி சிவபெருமான், அம்மன், பெருமாள் கோயில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

விரதம் இருப்பது எப்படி?

ஆடிக்கிருத்திகை நாளில் அதிகாலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.

அன்று காலையே பக்தர்கள் மனதார முருகனை வணங்கி தங்களது விரதத்தை தொடங்குவது நல்லது ஆகும்.

காலையில் முருகன் கோயிலுக்குச் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம். 

கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலே பூஜையறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்களிட்டு தீபாராதனை காட்டி வழிபடலாம். 

மாலையில் கோயிலுக்குச் சென்று சாமிதரினம் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். வீட்டில் உள்ள பூஜையறையில் முருகப்பெருமானுக்கு வாழையிலையிட்டு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்வைத்து படையலிட்டும் விரதத்தை நிறைவு செய்யலாம்.

ஆடிக்கிருத்திகை நாளில் முருகப்பெருமானுக்கு உகந்த கந்தர் அலங்காரம், கந்த சஷ்டி, திருப்புகழ் ஆகியவற்றை பாடி முருகப்பெருமானை வணங்கலாம்.

பல பக்தர்கள் கிருத்திகையை முன்னிட்டு பால்குடம், காவடி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget