மேலும் அறிய

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று பார்வையிட்டார். முன்னதாக அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று, மரகத லிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்தார். 

தொடர்ந்து சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் குறித்து கேட்டறிந்தார்.


தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

விமானத்தில் திருச்சி வந்த ஆளுநர்

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டார். ஆளுநரின் வருகையையொட்டி திருச்சி முதல் தஞ்சாவூர் வரையிலான வழித்தடத்திலும், தஞ்சாவூர் மாநகரப் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தஞ்சாவூருக்கு வந்த ஆளுநர், மதியம் சுமார் 2 மணியளவில் சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநரை வரவேற்ற மாவட்ட கலெக்டர் 

அரண்மனை வளாகத்திற்கு வந்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அவரது சகோதரர் அப்பாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட கலெக்டர் ரேவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கோட்டாட்சியர் நித்யா உள்ளிட்டோர் வரவேற்றனர். 

ஆளுநரின் வருகையையொட்டி அரண்மனை வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் தரிசனம்

அரண்மனை வளாகத்திற்கு வந்த ஆளுநர் முதலில் அங்குள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். அங்கு மரகத லிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவிலின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சரஸ்வதி மகால் நூலகத்தில் அரிய பொக்கிஷங்களை பார்வையிட்டார்

தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தை ஆளுநர் பார்வையிட்டார்.

பல நூற்றாண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அறிவு, இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டு வரலாற்றை பாதுகாத்து வரும் முக்கியமான அறிவுக் களஞ்சியமாக சரஸ்வதி மகால் நூலகம் விளங்கி வருகிறது. நூலகத்தில் பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நேரில் பார்வையிட்ட ஆளுநர், நூலகத்தின் வரலாறு மற்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் அரிய ஆவணங்களின் சிறப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்

நூற்றாண்டுகளை கடந்தும் பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய நூல்களின் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் ஆளுநருக்கு விளக்கினர். பழமையான ஆவணங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அவற்றின் பராமரிப்பு முறைகள் உள்ளிட்ட விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

தமிழர்களின் பழமையான அறிவு மற்றும் இலக்கியச் செல்வங்களை எதிர்கால தலைமுறைகளுக்கும் பாதுகாத்து வழங்குவதில் சரஸ்வதி மகால் நூலகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதும் இந்த பார்வையின்போது எடுத்துரைக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்

சரஸ்வதி மகால் நூலகத்தை தொடர்ந்து, அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தையும் தமிழக ஆளுநர் பார்வையிட்டார். தஞ்சாவூரின் வரலாறு, கலை, பண்பாடு மற்றும் பல்வேறு ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய பழமையான பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். தஞ்சாவூரின் வரலாற்றுப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் பாதுகாக்கப்பட்டு வரும் பொருட்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வரலாற்றுப் பெருமையை அறிந்த ஆளுநர்

சோழர், நாயக்கர், மராத்தியர் உள்ளிட்ட பல்வேறு ஆட்சிக் காலங்களின் வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே கொண்டுள்ள தஞ்சாவூர், தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்று நகரமாக திகழ்கிறது. அந்த வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயமாக தஞ்சாவூர் அரண்மனையும், அதன் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மகால் நூலகமும் விளங்கி வருகின்றன. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆளுநர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஆளுநரின் வருகையையொட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருந்தனர். அரண்மனைக்கு ஆளுநர் வந்தது முதல் அவர் புறப்பட்டுச் செல்லும் வரை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அரண்மனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆளுநரின் வாகனப் பயணத்தின்போதும் வழித்தடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தஞ்சையில் இருந்து திருச்சி வழியாக சென்னை புறப்பட்டார்

சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்னர் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டார். தொடர்ந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Embed widget