Selvaragavan: செல்வராகவன் போட்ட ட்வீட்.. ஏதாவது பிரச்னையா இருக்குமோ..கேள்விகேட்கும் ரசிகர்கள்..!
செல்வராகவனுக்கு ஏதாவது பிரச்னையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
தமிழில் ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகன் தொடர்ந்து காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.
காதல் கொண்டேன் படத்தில் தனது சகோதரரான தனுஷையும், நடிகை சோனியா அகர்வாலையும் அறிமுகப்படுத்தினார். இதனிடையே சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு இடையே காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செல்வராகவன் தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
View this post on Instagram
இரண்டாவது திருமணத்திற்கு பிறகு, செல்வராகவனிடம் பல மாற்றங்கள் தெரிந்தன. பொதுவெளியில் அவ்வளவாக பேசாத செல்வராகவன் அடிக்கடி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்.சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி வாழ்வியல் தத்துவங்களையும் வெளியிட்டு வருகிறார்.
முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடங்கலாய் இருப்பது “ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் “ என்ற நினைப்புதான். சிறிதோ பெரிதோ எந்த காரியத்தையும் உடனே முடித்து விடுங்கள். மனம் முழுக்க ஒரு நிம்மதி பரவி முன்னேற்றத்தை கண் முன்னால் காண்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 24, 2021
இந்த நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் , “ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.” என்று பதிவிட்டார்.
ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.
— selvaraghavan (@selvaraghavan) December 26, 2021
இதை பார்த்த நெட்டிசன்கள் செல்வராகவனை டேக் செய்து, உங்களுக்கு ஏதாவது பிரச்னையா, என்ன ஆனது சார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.