Watch Video :“பாவம் புண்ணியமெல்லாம் பாக்காத” - எகிடுதகிடு லுக்கில் கெளதம் மேனன்.. மிரட்டும் செல்ஃபி ட்ரெய்லர்
ஜிவி பிரகாஷ் குமார், கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் குமார், கெளதம் மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் செல்ஃபி படத்தில் வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளார். வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. டீசரில் கல்லூரி மாணவராக ஜி வி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். வில்லனாக கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளதாக தெரிகிறது.. படம் நீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ட்ரெய்லரின் கெளதம் மேனனின் மிரட்டலான லுக்கும், வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே, ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் நாளை பேச்சுலர் படம் வெளியாக உள்ள நிலையில், வரும் 9 ஆம் தேதி ஜெயில் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்