Seenu Ramasamy | லேட்டானா வட்டி.. எப்படி வளர்ச்சி? OTT தளங்கள் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி குற்றச்சாட்டு..
”சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தயாரிப்பாளரிடம் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன.”
ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புரட்சியாக பார்க்கப்படுகிறது.திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க விரும்பு ரசிகர்களை விட , ஓடிடியில் திரைப்படத்தை காண விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கொரோனா பேரிடர் சமயங்களில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்கள் படங்களை வெளியிடுவதற்கு ஓடிடியையே நம்பி இருக்கின்றனர்.இந்த சூழலில் இயக்குநர் சீனு ராமசாமி ஓடிடி தளங்கள் வட்டி வசூலிப்பதாகவும் , நிறுவனங்கள் தயாரிப்பாளர்களை நடத்தும் விதம் குறித்தும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ” சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தயாரிப்பாளரிடம் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன. சில ஓடிடி நிறுவனங்கள்'content based films' தயாரிப்பாளர்கள் வளர்ந்தால்தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை. கதை படங்கள் வளரும் புதியவர்கள் தழைப்பர்?” என குறிப்பிட்டுள்ளார்.
சொன்ன தேதியை
— R.Seenu Ramasamy (@seenuramasamy) January 4, 2022
விட திரைப்படத்தை சற்று தள்ளி
வெளியிட்டால் தயாரிப்பாளரிடம்
தந்த அட்வான்ஸ்
தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன
சில ஓடிடி நிறுவனங்கள்
'content based films'
தயாரிப்பாளர்கள்
வளர்ந்தால் தானே
ஓடிடி நிறுவனங்களுக்கு
பெருமை
கதை படங்கள் வளரும்
புதியவர்கள் தழைப்பர்?#ஓடிடி #OTT
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனு ராமசாமி. சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'மாமனிதன்' படம் உருவாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருகிறார்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள சூழலில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமாரை வைத்து ‘இடிமுழக்கம்’ எனும் படத்தை இயக்கிவருகிறார் சீனுராமசாமி. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பித்து இன்று நிறைவடைந்தது. முழுக்க சென்டிமெண்ட் கதைகளாகவே எடுத்து வந்த சீனுராமசாமி இந்த படத்தில் ஆக்ஷனை கையில் எடுத்துள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு புதிய பரிமாணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடிமுழக்கம் படத்தின் தலைப்பை அவரது முந்தைய படங்களின் ஹீரோக்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.