இதுதான் புது ட்ரெண்டு.. பிரபலங்களின் வீடு வாசல் வரை ஒரு ட்ரிப்.. யூட்யூபின் புதிய கலாச்சாரம்!
பிரபலத்தின் வீட்டிற்குச் செல்லும் வழி, பயண திட்டம், அந்த பிரபலத்தை பார்ப்பது, ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஏராளமான வீடியோக்கள் லட்சக்கணக்கான வியூவ்ஸ் பெறும் அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ளது.
பிரபலங்கள் மீதான ஈர்ப்பு உலகெங்கும் உள்ளதுதான் என்றாலும், நம்மூரில் கொஞ்சம் தூக்கலாகவே தான் இருக்கும். அந்த ஈர்ப்பால் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளது. பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று அங்கிருந்து யூட்யூப் வீடியோக்கள் போடுவது. அவர்களது வீட்டிற்குள் செல்வது போன்ற விஷயமெல்லாம் இல்லாமல், வெளியில் இருந்து பார்ப்பது அதிகம் மற்றும் அவர்கள் என்றாவது செல்லும்போது அந்த பிரபலத்தை பார்த்துவிடலாம் என்று நம்புகிறார்கள். க்ளாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸில் ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான பலர் வசிக்கிறார்கள், நம்மை அங்கு மேப் இட்டு வழிகாட்டி அழைத்து செல்கிறார்கள். ரோல்ஸ் ராய்ஸ் உடனான சுற்றுப்பயணங்கள் கூட உள்ளன, ஏனென்றால் வாடகைக்கு எடுக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸில் LA ஐ சுற்றி சவாரி செய்ய எல்லோராலும் முடியாது என்பதால் இரண்டு மணிநேர வேன் சுற்றுப்பயணங்களும் உள்ளன.
இந்த கலாச்சார வளர்ச்சியால் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் பிரபலங்களின் வீடுகளுக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோக்கள் நிறைந்துள்ளன. இது எதுவும் அந்த பிரபலங்களின் அழைப்பாலோ, அவர்களின் தூண்டுதாலாலோ நடைபெறவில்லை.அவர்கள் மீது ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் செய்யும் வேலை இது. அவர்கள் பெரும்பாலும் முன் வாயிலுக்குச் செல்கின்றனர், அங்கிருந்து பேசி விடியோ உருவாக்குகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்களின் ரசிகர்கள் கூட இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் செய்துள்ளனர். சில வீடியோக்களில் உள்ளதை விட அதிகமாக உயர்த்தி மிகைப்படுத்தப்பட்டு தம்ப்னைல் மற்றும் தலைப்புகள் வைத்து வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெறும் அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ளது. பிரபலத்தின் வீட்டிற்குச் செல்லும் வழி, பயண திட்டம், அந்த பிரபலத்தை பார்ப்பது, ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஏராளமான வீடியோக்கள் யூட்யூபில் நிறைந்துள்ளன. பல விடியோக்களில், அந்த பிரபலங்களின் ஆடம்பரமான மாளிகைகளுக்குள் செல்லும் அவர்களுடைய சொகுசு கார் கட்சிகள் இடம்பெறும். அப்போது திறக்கும் அந்த ராட்சத காதவுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும், மிகப்பெரிய வீடு கொஞ்சமாக தெரிந்துவிடும், அதுதான் அந்த வீடியோவை பல மில்லியன் வியூஸ்களுக்கு அழைத்து செல்லும்.
உதாரணமாக கோலிவுட் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த வீடியோவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சாகசப் பயணத்தின் ஆவணமாக்கம் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று சிவகார்த்திகேயனை சந்தித்த போது எடுத்த காட்சிகளை நம்மிடம் காட்டப் போவதாக வீடியோ பதிவு செய்தவர் ஆரம்பத்தில் கூறுகிறார். அவர் உண்மையில் வீடியோவில் சிவகார்த்திகேயனை சந்திக்கவில்லை. கோபமடைந்த வீட்டு செக்யூரிட்டி ஒரு சில நிமிடங்களில், "சிவகார்த்திகேயன் சார் வீட்டில் இல்லை" என்று அவர்களிடம் சொல்கிறார். சிறிது நேரத்தில், ஒரு வெள்ளை நிற கார் அதன் கருப்பு நிறமுடைய கண்ணாடிகளுடன், உள்ளே செல்கிறது. சிவகார்த்திகேயன் காருக்குள் இருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இதுபோன்ற ஒரு தூரத்து சந்திப்பு கூட அவரது வீட்டிற்கு வெளியே அவ்வளவு நேரம் காதிருந்ததற்கான பரிசாகக் கருதப்படுகிறது. அதில் வீடியோ தயாரிப்பாளர் நமக்கு ஒரு பயனுள்ள விளக்கத்தைத் தருகிறார்: "உள்ளே நிறைய மரங்கள் உள்ளன, அவை வீட்டை மறைத்துள்ளன, அதனால் வீட்டை பார்க்க முடியவில்லை. எது எப்படியோ, தோட்டம் பராமரிக்கப்படுகிறது." என்று கூறி விடியோவை முடிக்கிறார்.
இன்னொரு வீடியோவில் மஞ்சு வாரியரின் ரசிகர்கள் அவரது திருச்சூர் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கின்றனர், அங்கு பணிபுரியும் ஒருவர் கோவிட்-19ஐக் காரணம் காட்டி வாயிலில் அவர்களைத் தடுக்கிறார். ஆனால், வீட்டிற்குள் தான் செல்ல முடியவில்லை, சிறுவயதில் அவர் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் ஆலமரத்தையும், அவருக்குப் பிடித்த கோயிலையும் காண்பிக்கின்றனர். Vloggers மஞ்சு சேச்சியை சந்திக்க முடியாவிட்டால் என்ன அவர் வாழ்ந்த இடத்தை காண்பிக்கிறோம் என்று வீட்டை சுற்றி உள்ள இடங்களை காட்டியே 17 நிமிட வீடியோவை உருவாக்கி உள்ளனர்.
அடுத்த வீடியோவில் மோகன்லால் வீட்டிற்கு செல்கிறார்கள். 'சைக்கிள் டிராவல் சீரிஸ்' என்ற தலைப்பில் கொச்சியில் உள்ள அவரது வீட்டை, 'ஷெரின்ஸ் வ்லாக்' சேனல் காட்டுகிறது. அதன் எபிசோட்களில் ஒன்று, 15 நிமிடங்கள் ஓடுகிறது, அதில் அவர் சைக்கிளில் "லாலேட்டனின்" வீட்டைத் தேடுவது, சுற்றி சுற்றி தொலைந்து போவது, சாலையோர வடைகளை கண்டு நிறுத்துவது, பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்களை சுட்டிக்காட்டுவது என்று ஸ்வாரஸ்யமான வீடியோக்களை வழங்குகிறார்கள். லேட்டட்டனின் வீட்டின் முன் வாயிலின் வழியாகச் சென்றால், வெளியிலிருந்து ஒரு மாசற்ற புல்வெளி, "அவரது புதிய கார்" மற்றும் அவரது கேரவனின் பின்பக்கம், ஆகியவற்றைப் பார்க்க முடியும். ஒரு தோட்டக்காரர் வந்து லாலேட்டன் வீட்டில் இல்லை, சென்னையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
சென்னையைப் பற்றி பேசுகையில், மலையாளி வோல்கர் அனூப்.எம் தனது பார்வையாளர்களை இருமொழி சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிற்கு செல்கிறார். “சூப்பர் ஸ்டாரின்” அண்டை வீட்டாராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இந்த வீடியோவில் போனஸ். ஊரைச் சுற்றிவிட்டு, ரஜினியின் வீட்டுக்கு வெளியே வருகிறார்கள். சென்னையின் சாலைகளில், மலையாளம் மற்றும் தமிழுக்கு இடையே சிரமமின்றி மாறி, வர்ணனை செய்து வருகிறார். இன்னும், தலைவரைக் காணும் அதிர்ஷ்டம் இருவருக்கும் வாய்க்கவில்லை.
மேலும் மகேஷ் பாபு ரசிகர்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் விரைவான வழிகாட்டி தேவைப்பட்டால், யாரோ ஒருவர் அதையும் வழங்கியுள்ளார். பின்னர் பல்வேறு நடிகர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட Instagram ஹேண்டில்கள் உள்ளன. அவர்களது இடுகைகளின் ஒரு பகுதி நட்சத்திரங்களின் வீடுகளுக்கான "பயணங்கள்" ஆகும். விஜய்யின் வீட்டிற்கு வெளியே உள்ள பல வீடியோக்களில் உள்ள பொதுவான தீம், அவரது படமான கத்தி (2014) இல் இருந்து “முறை தான், ஒரு முறை தான், உன்னைப் பார்த்தால் அது வரமே” என்ற பாடல் வரிகள் ஒலிக்கின்றன. தளபதி ரசிகர்கள் ஏறக்குறைய பயபக்தியுடன் அவரது வாயிலையோ அல்லது அவரது காரையோ பார்க்கும்போது இந்த பாடலை பயன்படுத்துகிறார்கள்.
View this post on Instagram
யூடியூப் வீடியோக்களில் உள்ள தலைப்புகள், குறிச்சொற்கள் மற்றும் அறிமுகங்கள் ரசிகர்களுக்கு அவர்கள் வாக்குறுதியளித்ததைக் காட்டாமல், ரசிகர்களை பணமாக்குவதற்கான ஒரு நேர்த்தியான வழியா என்ற விவாதம் எழுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, யூடியூப் உலகின் விளம்பரப் பார்வைகள் மற்றும் பிற நுணுக்கங்களைப் பொறுத்து குறைந்தபட்சம் பல ஆயிரம் ரூபாய்கள் சம்பாதிக்க முடியும். பிரபலங்களின் வீடுகளை காண மக்களிடையே இருக்கும் ஆர்வமும், இயலாமையும் தான் இந்த விடியோக்களுக்கு முதலீடு.