Watch video: ராதிகாவுக்கு 61வது பிறந்தநாள்: மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் சரத்குமார்!
நடிகை ராதிகா இன்று தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சரத்குமார் அழகான அன்பான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு 1978ம் ஆண்டு பாசத்திற்குரிய இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கி இன்று வரை வெகு சிறப்பாக பயணித்து கொண்டிருக்கிறார். இந்த வீர மங்கை தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
துணிச்சலான நடிகை :
தமிழ் சினிமா கண்ட துணிச்சலான ஆளுமையான நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது சிறப்பான, யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி ராஜாங்கத்தை உருவாக்கியவர். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் 'சித்தி' என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு பாசமான பந்தத்தை உருவாக்கியவர்.
45 ஆண்டுகால திரைப்பயணம் :
தொடர்ந்து பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தும் ராதிகா சரத்குமார் ஒரு நடிகையாக, தயாரிப்பாளராக மட்டுமின்றி முன்னேற துடிக்கும் பல பெண்களுக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். அவரின் இந்த 45 ஆண்டுகால திரைப் பயணத்தில் ஏராளமான விருதுகளை குவித்தவர். இன்று வரை சின்னத்திரை வெள்ளித்திரை என மிகவும் பிஸியான ஷெட்யூல் போட்டு பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் ராதிகா தனது குடும்பம், கணவருடன் நேரத்தை செலவு செய்ய என்றுமே தவறியதில்லை.
சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார் மகன் , நண்பர்கள், கணவருடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
சரத்குமார் வாழ்த்து :
தமிழ் சினிமாவின் மிகவும் க்யூட்டான காதல் ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் ராதிகா - சரத்குமார் ஜோடி. இவர்கள் இருவரும் மிகவும் அன்யோன்யமான ஜோடிகளாக வலம் வருகிறார்கள். மிகவும் அழகான பாண்டிங் இவர்களுக்குள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக ராதிகாவின் குழந்தை பருவத்து புகைப்படங்கள் முதல் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக் கிளிக்ஸ் வரை பல புகைப்படங்களை பகிர்ந்து ஆசை மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.
View this post on Instagram
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் வாழ்க்கையில் என்றுமே மிகுதியான அன்பு, மகிழ்ச்சி, செழிப்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கட்டும்"
ஹேப்பி பர்த்டே !
வித் லவ்
மாமா
என செல்லமாக மனைவி ராதிகாவுக்கு அன்பான குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். சரத்குமார் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.